இதுவரையில் 30,000 பேருக்கு மேல் வேலை - பெருமளவுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய தொழில் : மத்திய அமைச்சர் மன்சுக் மண்டாவியாவின் திட்டம்!
இதுவரையில் 30,000 பேருக்கு மேல் வேலை - பெருமளவுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய தொழில் : மத்திய அமைச்சர் மன்சுக் மண்டாவியாவின் திட்டம்!
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய கப்பல் துறை மற்றும் ரசாயன உரத்துறை இணையமைச்சர் மன்சுக் மண்டாவியா, இந்தியாவில் உள்ள கப்பல் கட்டும் தளங்களில் தற்போது சுமார் 30,000-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுவதாக கூறியுள்ளார்.
இந்த துறைக்கு புத்துயிரூட்டினால், வேலைவாய்ப்பு பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். உற்பத்தித் தொழிலைப் பொறுத்தவரை, கப்பல் கட்டும் தொழில் அதிகளவில் வேலைவாய்ப்பை வழங்கும் துறையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தொலைதூர, கடலோர மற்றும் ஊரகப்பகுதிகளில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கக்கூடிய இந்த தொழிலுக்கு உண்டு என்றும் அமைச்சர் தமது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
கப்பல் கட்டுவதற்கு அதிகளவில் ஆர்டர்கள் வரும்போது, கூடுதலாக மனிதவளம் தேவைப்படும் என்றும், இது வேலைவாய்ப்புகளை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மன்சுக் மண்டாவியா தெரிவித்துள்ளார். எண்ணெய், எரிவாயு மற்றும் பல்வேறு முக்கிய பொருட்களை எடுத்துச் செல்வதன் மூலம் வர்த்தகத் துறையிலும், நாட்டின் பாதுகாப்பு அடிப்படையிலும், கப்பல் கட்டும் தொழில் துறை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கப்பல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனமான கொச்சி கப்பல் கட்டும் தளம், நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்திலான விமானந்தாங்கி கப்பலை கட்டி வருவதாகவும் கூறியுள்ளார். வேறுசில கப்பல் கட்டும் தளங்களில் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், ஏவுகணை பொருத்திய படகுகள், ஆழ்கடல் ரோந்துப் படகுகள் போன்றவற்றைக் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.