ரோபோ ஷங்கர் மூலம் அஜித்துக்கு கிடைத்த மிக அழகிய பரிசு!
ரோபோ ஷங்கர் மூலம் அஜித்துக்கு கிடைத்த மிக அழகிய பரிசு!
அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் காமெடி நடிகராக நடித்தவர் ரோபோ ஷங்கர். அந்த படத்தின் படப்பிடிப்பின் போது அவருடைய குடும்பத்தோடு அஜித்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
மேலும் ரோபோ ஷங்கரின் நண்பர் ஒருவர் ஹைதராபாத்தில் இருக்கிறார். அவர் தீவிரமான அஜித் ரசிகர் என்பதால் ரோபோ ஷங்கர் அஜித்தை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளார். பின்னர் ரோபோ ஷங்கர் மற்றும் அவருடைய நண்பர் அஜித்தை சந்தித்துள்ளனர்.
நடிகர் அஜித் அவருடன் பழகியதை பார்த்து அசந்துபோன அவர் ஒரு அழகிய பரிசு ஒன்று கொடுத்துள்ளார். அந்த பரிசு என்னவென்றால் அஜித் மற்றும் அவருடைய மகள் இருப்பது போல ஒரு புகைப்படத்தை தந்துள்ளார். மேலும் அந்த புகைப்படம் தற்போது அஜித் அவர்களின் வீட்டில் மாட்டப்பட்டுள்ளதாக ரோபோ ஷங்கரின் நண்பர் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.