“தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதே நேரத்தில் இந்தி மொழியையும் பயன்படுத்த வேண்டும்” - அமித்ஷா விருப்பம்!!
“தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதே நேரத்தில் இந்தி மொழியையும் பயன்படுத்த வேண்டும்” - அமித்ஷா விருப்பம்!!
இந்தி தினத்தையொட்டி மத்திய அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுயிருப்பதாவது:-
இந்தியாவில் பல்வேறு மொழிகள் உள்ளன. ஒவ்வொரு மொழியும் முக்கியத்தும் வாய்தது. ஆனால் அதே நேரம் உலக அரங்கில் இந்தியா அடையாளப்படுத்தும் விதமாக ஒரு மொழி இருக்க வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில், இந்தியாவை இணைக்கின்ற மொழி ஒன்று இருக்குமானால் அது அதிகமானோரால் பேசப்படும் இந்திதான்.
நாம் ஒவ்வொருவரும் நமது தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதே நேரத்தில் இந்தி மொழியையும் பயன்படுத்த வேண்டும். இந்தி தினத்தை முன்னிட்டு இந்த வேண்டுகோளை நான் முன் வைக்கிறேன்.
அப்படி செய்தால், மகாத்மா காந்தி, இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோரின் கனவான இந்தியா முழுமைக்கும் ஒரு மொழியாக இந்தி அமையும்.
அனைவருக்கும் எனது இந்தி தின நல்வாழ்த்துக்கள்
இவ்வாறு அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.