விதிமீறிய எம்.பி வசந்தகுமார் போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை!!

விதிமீறிய எம்.பி வசந்தகுமார் போலீஸ் கிடுக்கிப்பிடி விசாரணை!!

Update: 2019-10-21 10:09 GMT

தமிழகத்தில் விக்கிரவாண்டி நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று கொண்டுவருகிறது.


தற்பொழுது கன்னியாகுமரியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வசந்தகுமார், இதற்க்கு முன் நாங்குநேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதால் சட்டமன்றத்தை விட்டு பாராளுமன்றத்திற்கு சென்றார். அதனால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது.


இன்று இடைத்தேர்தல் நடக்கும் சமயத்தில், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார், தற்பொழுது அவருக்கு சம்மந்தமே இல்லமால் இருக்கும் இடைத்தேர்தல் நடக்கும் நாங்குநேரி தொகுதிக்குள் சட்டத்திற்கு எதிராக நுழைய நினைத்ததால் காவல்நிலையம் அழைத்துச்சென்று போலீசார் அவரை விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.


Similar News