முரசொலி பஞ்சமி நில பிரச்சனை பா.ஜ.க எடுத்த நடவடிக்கை ! நோட்டீஸ் அனுப்பிய SC கமிஷன்!

முரசொலி பஞ்சமி நில பிரச்சனை பா.ஜ.க எடுத்த நடவடிக்கை ! நோட்டீஸ் அனுப்பிய SC கமிஷன்!

Update: 2019-10-23 05:41 GMT

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் சில வாரங்களுக்கு முன் திரையரங்குகளில் வெளிவந்தது. அதனை பலர் கண்டு பாராட்டி வருகின்றனர். இந்த படம் பஞ்சமி நிலம் உரிமை மீட்பை கருவாக கொண்டு உருவாக்கப்பட்டதால் பாராட்டுகள் மிக அதிகமாகவே வருகின்றன.


இந்த படத்தை பாராட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது த்விட்டேர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். “அசுரன் – படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் – சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனிற்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷிற்கும் பாராட்டுகள்”, என திமுக தலைவர் ஸ்டாலின் பதிவு செய்திருந்தார்.


தி.மு.க வின் அதிகாரபூர்வ பத்திரிகையான முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலங்களை வளைக்கப்பட்டு கட்டப்பட்டதை பா.ம.க நிறுவனர் அம்பலப்படுதினார். இதை உறுதிப்படுத்தும் வகையில் பா.ஜ.க வின் தடா பெரியசாமியும் பாமக நிறுவனர் கூறியது உண்மை தான் என கூறினார்.


இதற்கடுத்து ஸ்டாலினுக்கும் பாமக நிறுவனருக்கும் இடையே பனிப்போர் நடந்தது வருகிறது


இந்நிலையில் பா.ஜ.க மாநில செயலாளர் மதுரை ஸ்ரீனிவாசன் SC கமிஷன் தேசிய தலைவர் L. முருகனிடம் முரசொலி பஞ்சமி நிலம் தொடர்பாக விசாரிக்குமாறு கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் முரசொலி அலுவலகம் பஞ்சமி நில விவகாரம் - தமிழக தலைமைச் செயலர் ஒரு வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேசிய SC கமிஷன். இதனால் பீதியில் அடைந்துள்ளது தி.மு.க வட்டாரங்கள்





https://twitter.com/SuryahSG/status/1186869136132980737

Similar News