ஸ்டாலினை காப்பாற்றுகிறாரா எடப்பாடி? முரசொலி - பஞ்சமி நில 1932-கெஜட் ஆதாரத்தை வழங்கினார் தடா பெரியசாமி! அரசிடம் 1974-க்கு பிந்தைய ஆதாரங்கள்தான் உள்ளதாம்!
ஸ்டாலினை காப்பாற்றுகிறாரா எடப்பாடி? முரசொலி - பஞ்சமி நில 1932-கெஜட் ஆதாரத்தை வழங்கினார் தடா பெரியசாமி! அரசிடம் 1974-க்கு பிந்தைய ஆதாரங்கள்தான் உள்ளதாம்!
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்ற குற்றச்சாட்டை பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் எழுப்பினார். இதனைத் தொடர்ந்து தேசிய பட்டியலின ஆணையத்திடம் தமிழக பாஜக பொதுச்செயலாளர் ஸ்ரீநிவாசன் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனு அடிப்படையில் தேசிய பட்டியலின ஆணையம் விசாரணையை தொடங்கியது. இதுதொடர்பான விசாரணை நேற்று (19.11.2019) சென்னை சாஸ்திரி பவனில் உள்ள தேசிய பட்டியலின ஆணைய அலுவலகத்தில் நடந்தது. இந்த விசாரணையில் ஆஜராகி ஆதாரங்களை அளிக்குமாறு முரசொலி அறக்கட்டளை நிர்வாக மேலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. சீனிவாசனுக்கும் சம்மன் அளிக்கப்பட்டிருந்தது. மற்றொரு புகார் தாரரான தடா பெரியசாமிக்கும் இதே சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. தமிழக அரசு சார்பில் தலைமை செயலாளர் ஆஜராகி அரசு தரப்பு ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த விசாரணையில் முரசொலி அறக்கட்டளை நிர்வாக மேலாளர் உதயநிதி ஆஜராகவில்லை. அதோடு அவரின் சார்பாக கலந்து கொண்ட ஆர்.எஸ்.பாரதியும், எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை. ஒரு கடிதத்தை மட்டும் கொடுத்துவிட்டு ஓடி விட்டார்.
அரசு தரப்பில் 1974-ஆம் ஆண்டுக்கு பிறகு உள்ள சில ஆவணங்களை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது இந்த நிலம் தலித்திடமிருந்து மற்ற சமூகத்தினரிடம் கைமாறிய பிறகு உள்ள ஆவணங்கள் ஆகும். அந்த நிலத்தின் மூலப்பத்திரத்தையோ அல்லது அதற்கு நிகரான ஆதாரங்களையோ அரசு சார்பில் சமர்பிக்கப்படவில்லை. 1974-ஆம் ஆண்டுக்கு பிந்தைய ஆவணங்களை சமர்ப்பித்ததன் மூலம் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் அல்ல என்று நிரூபிக்கின்றன முயற்சியில் எடப்பாடி அரசு தரப்பு ஈடுபட்டுள்ளது, வெட்ட வெளிச்சமாகி உள்ளது.
அதேபோல சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பஞ்சமி நிலமே இல்லை என்று எடப்பாடி அரசு அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. இதுவும் முரசொலி – பஞ்சமி நில விவகாரத்தை குழி தோண்டி புதைக்கும் முயற்சியே.
ஒரு தனி நபரான தடா பெரியசாமியால், 1934-ஆம் ஆண்டு கெஜட் ஆதாரத்தை கொடுக்க முடியும் போது, அரசு தரப்பில் 1974-ஆம் ஆண்டிற்குப் பிறகு உள்ள ஆதாரங்களை மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றால், இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் பித்தலாட்ட முயற்சி என்பதில் ஐயமில்லை.