“சப்தங்கள்” மூலம் உடல் மற்றும் மன இறுக்கத்தை சரிப்படுத்த முடியுமா?
“சப்தங்கள்” மூலம் உடல் மற்றும் மன இறுக்கத்தை சரிப்படுத்த முடியுமா?
ஒலியிலிருந்து தான் நாம் பார்க்கின்ற எல்லாமே உருவானது என்று மத நூல்களும் ஆராய்ச்சியாளர்களும் கூறிவருகின்றனர். அந்த ஒலியானது ஒரு குறிப்பிட்ட அளவில், ஒரு குறிப்பிட்ட அடர்த்தியில் இருக்கும்போது இனிமையான சப்தங்களாய் மாறுகிறது. இசைக்கருவிகளோ இசைக்கலைஞர்களோ எழுப்பும் ராகங்கள் ஒருவகை இனிமையான சப்த ஒலிகளே!! இந்த இசை சப்தங்களால் பல அற்புதங்களை செய்ய முடியும் என்று ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன
மேற்கத்திய இசைக்கு “நோட்ஸ்” தனித்துவ குறிப்புகள் தேவைப்படுவது போல், இந்திய ராகங்களுக்கு தேவைப்படுவதில்லை காரணம், இவை இயல்பிலேயே தெய்வீகத் தன்மை கொண்டவை. இவை வழி வழியாக குரு சிஷ்யப் பாரம்பரியத்தில் மனனத்தின் மூலமாக கடத்தப்பட்டு வந்திருக்கிறது. இந்த ராகங்கள் ஏராளமான அற்புதங்களை செய்ய வல்லவை. ஒரு காயை கனிய வைக்கவோ அல்லது மழையை வரவழைக்கவோ இந்த சப்தங்களால் முடியும்.
இன்றைக்கு ஆராய்ச்சியாளர்கள் பெரும்பாலும் இதுபோன்ற ராக சப்தங்களை, உடல் மற்றும் மன வியாதிகளை குணப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. இயல்பாகவே சப்தங்கள் தங்களுடைய அடர்த்தி மற்றும் தன்மையைப் பொறுத்து ஒருவரை எரிச்சலடைய வைக்கவோ அல்லது சாந்தப்படுத்தவோ முடியும்.
நம்முடைய ஒவ்வொரு உணர்வுபூர்வமான நடவடிக்கைக்கும் ஒரு குறிப்பிட்ட நரம்பு மண்டலம் காரணமாக அமைகிறது. உதாரணமாக நாம் ஒரு சூழ்நிலையை எப்படிக் கையாளுகிறோம், உதாரணமாக ஒரு சூழலில் து பயப்படுகிறோமா அல்லது எதிர்த்து நிற்கிறோமா என்பது அந்த குறிப்பிட்ட நரம்பு மண்டலம் எப்படி பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையே சார்ந்திருக்குமாம்.
ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் இருக்கும் இனிமையான சப்த அலைகள் நம் உடலில் உள்ள வேகஸ் நரம்பு மண்டலத்தை தளர்த்தி புத்துணர்வு பெற செய்கிறது. இதனால் நம் உடலும் மனமும் அமைதியாகவும் புத்துணர்வுடனும் இருக்கு இயலும் என்கின்றன ஆய்வுகள். இதற்கு இசைக்கருவிகள் கூட தேவையில்லை வெறுமனே வாயால் பாடுவதோ அல்லது சப்தம் எழுப்புவதோ கூட போதுமானதாக இருக்கும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இது மன இறுக்கத்தை மட்டுமல்லாமல் இதய மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களில் ஆரம்பகட்ட அசௌகரியங்களையும் மாற்றி சரிசெய்து விடுகிறது.