5 ஏக்கர் மாற்று நிலத்தை முஸ்லிம்கள் நிராகரிக்க வேண்டும்! அயோத்தி தீர்ப்பின் மீது ஓவைஸி கடும் அதிருப்தி!
5 ஏக்கர் மாற்று நிலத்தை முஸ்லிம்கள் நிராகரிக்க வேண்டும்! அயோத்தி தீர்ப்பின் மீது ஓவைஸி கடும் அதிருப்தி!
அகில இந்திய மஜிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஒவைசி
ஹைதராபாத்தில் செய்தி ஊடகங்களுடன் பேசினார் . இந்த தீர்ப்பில் தான் திருப்தி அடையவில்லை என்றும், மசூதி கட்ட உச்சநீதிமன்றத்தின் 5 ஏக்கர் மாற்று நில சலுகையை முஸ்லிம் தரப்பு நிராகரிக்க வேண்டும் என்றும் கூறினார்.
“தீர்ப்பில் திருப்தி இல்லை. ஆனால், உச்ச நீதிமன்றம் உண்மையில் உச்சமானது, அது தவறு எதையும் செய்துவிடவில்லை என்றாலும், 1992 இல் இடிக்கப்பட்ட மசூதியை மீண்டும் கட்டியெழுப்ப அயோத்தியில் உள்ள முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை.
எங்களுக்கு அரசியலமைப்பில் முழு நம்பிக்கை உள்ளது, நாங்கள் எங்கள் உரிமைக்காக போராடிக்கொண்டிருந்தோம், எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் நன்கொடையாக தேவையில்லை" என்று ஓவைசி கூறினார்.
"இந்த 5 ஏக்கர் நில சலுகையை நாங்கள் நிராகரிக்கிறோம் என்றும் , எங்களுக்கு இதன் மூலம் ஆதரவளிக்க வேண்டாம்," என்று அவர் கூறினார்.
காங்கிரஸ் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளாலும் முஸ்லிம் கடந்த காலங்களில் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று கூறிய ஒவைசி 1949 ஆம் ஆண்டில் மசூதிக்குள் புகுந்து சிலர் ராமர் சிலை உட்பட சில சிலைகளை வைத்தனர். அடுத்து ராஜிவ் காந்தி ஆட்சி காலத்தில் மசூதிக்குள் சில சக்திகள் நுழைய பூட்டப்பட்டிருந்த கதவுகளை திறந்து விட்டனர், அடுத்து நரசிம்மராவ் ஆட்சியில் அவர் தனது அதிகாரத்தை செயல்படுத்த தவறிவிட்டார், இது எல்லாமே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடைபெற்றதுதான். இதனால்தான் பாபர்மசூதி இடிக்கப்பட காரணமாகிவிட்டது. என்றார் ஒவைசி.