மும்மொழி கொள்கையை ஆதரிக்க வேண்டும்-தமிழக பா.ஜ.க ஐ.டி பிரிவு அமைப்பாளர்!
மும்மொழி கொள்கையை ஆதரிக்க வேண்டும்-தமிழக பா.ஜ.க ஐ.டி பிரிவு அமைப்பாளர்!
இந்திதான் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு உகந்த மொழி என AmitShah அவர்கள் கூறியுள்ள கருத்தில் எந்த ஒரு தவறும் இல்லை. இதை இந்தி திணிப்பு என்றும் தமிழுக்கு எதிராக என்றும் திசை திருப்ப வேண்டாம்.
மூன்றாவது மொழியாக ஹிந்தி இன்று தமிழகத்தில் சிபிஎஸ்சி, ஐசிஎஸ்சி பள்ளிகளில் அதிகளவில் படித்து வருகின்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இது எட்டாக் கனியாக உள்ளது.
திராவிட கட்சிகள் அரசியலுக்காக இதை எதிர்த்தாலும் அவர்கள் சொந்தமாக நடத்தும் பள்ளிகளில் ஹிந்தியை முதல் மொழியாக பயிற்றுவித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே.
வேறு மொழி பேசும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் மற்ற மாநிலங்களில் மூன்றாம் வகுப்பு முதல் ஹிந்தியை பயின்று வருகின்றனர் அதனால் அவர்களுடைய தாய் மொழி அழிந்துவிடவில்லை.
ஹிந்தி தான் இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு உகந்த மொழி ஆங்கிலத்தால் அந்த இடத்தை நிரப்ப முடியாது, இதை நடைமுறைப்படுத்தாத ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான் அரசியலைக் கடந்து அனைவரும் மும்மொழி கொள்கையை ஆதரிக்க வேண்டும்
- CTR. நிர்மல் குமார் பா.ஜ.க ஐ.டி பிரிவு அமைப்பாளர்