மது அருந்த மறுத்ததற்காக முத்தலாக்!!

மது அருந்த மறுத்ததற்காக முத்தலாக்!!

Update: 2019-10-15 09:31 GMT

பீகாரில் உள்ள ஒரு இஸ்லாமிய பெண், தனது கணவரின் வார்த்தை படி சிறிய உடை அணிந்து கொள்ள மறுத்துள்ளார். தனது கணவன் அந்த பெண்ணை மது அருந்த கூறியதையும் மறுத்துள்ளார். இதனால் உடனடியாக அந்த கணவர் அந்த பெண்ணிற்கு முத்தலாக் அளித்து அந்த பெண்ணை கை கழுவி விட்டார்.
"நான் 2015 இல் திருமணம் செய்துகொண்டேன், எங்கள் திருமணத்தின் சில நாட்களுக்குப் பிறகு நாங்கள் டெல்லிக்கு குடி சென்றோம். சில மாதங்களுக்குப் பிறகு, நகரத்தின் மற்ற நவீன பெண்களைப் போலவே இருக்கும்படி அவர் என்னிடம் கூறினார், நான் சிறிய ஆடைகளை அணிய வேண்டும் என்று வற்புறுத்தினார். மது அருந்தவும் வற்புறுத்தினார்.இந்த செயல்களை நான் செய்ய மறுத்தால், அவர் ஒவ்வொரு நாளும் என்னை அடிப்பார்.", என்று அந்த பெண் கூறினார்.
"பல ஆண்டுகளாக என்னை அவர் சித்திரவதை செய்த பிறகு, சில நாட்களுக்கு முன்பு அவர் என்னை தனது வீட்டை விட்டு வெளியேறச் சொன்னார், நான் மறுத்தபோது, அவர் எனக்கு முத்தலாக் கொடுத்து விட்டார்" என்று அந்த பெண் குற்றம் சாட்டினார்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண், மாநிலத்தின் மகளிர் ஆணையத்தையும் அணுகி தனது கணவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
"கணவர் அவளை மிக கொடூரமாக சித்திரவதை செய்வார், இரண்டு முறை அவர் தனது மனைவியின் வயிற்றில் வளரும் குழந்தயின் கருவை கலைத்துளார்.  à®‡à®¨à¯à®¤ வழக்கை நாங்கள் அறிந்திருக்கிறோம். செப்டம்பர் 1 ஆம் தேதி, அவரது கணவர் தனது மனைவிக்கு முத்தலாக் கொடுத்தார். இந்த வழக்கில் நாங்கள் அவரது கணவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவரை, "என்று பீகார் மாநில பெண்கள் ஆணையத்தின் தலைவர் தில்மணி மிஸ்ரா கூறினார். 


இந்திய அரசு முத்தலாக் சட்டத்தை சமீபகாலத்தில் தடை செய்ததால், அந்த நபர் கடுமையாக தண்டிக்கப்படுவார்  à®Žà®© எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.


Similar News