போனில் முத்தலாக் கூறிய கணவன்! போலீசில் புகார் அளித்த மனைவியின் மூக்கு அறுப்பு!!

போனில் முத்தலாக் கூறிய கணவன்! போலீசில் புகார் அளித்த மனைவியின் மூக்கு அறுப்பு!!

Update: 2019-08-08 06:19 GMT


முத்தலாக் தடை சட்டம் கொண்டுவரப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, அவரது கணவர் போன் மூலம் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துவிட்டதாக கூறியுள்ளார். 


உடனே அந்த பெண், போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.


கணவர் வீட்டாரை போலீசார் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ்  வழக்குப்பதிவு செய்ய வேண்டியது வரும் என்று எச்சரித்தனர். இதனைத்தொடர்ந்து அந்த பெண்ணை கணவர் வீட்டினர் அழைத்துச் சென்றர்.


வீட்டுக்கு சென்ற கணவரின் உறவினர்கள், அந்த பெண்ணை அடித்து உதைத்துள்ளனர். பின்னர் அந்த அப்பாவி பெண்ணின் மூக்கை அறுத்துள்ளனர். இதனை தட்டிக்கேட்ட பெண்ணின் தாயாரை கல்லால் அடித்துள்ளனர். இப்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இது குறித்து தகவல் அறிந்ததும், போலீசார் விரைந்து சென்று கணவனின் உறவினர்களை கைது செய்தனர். கணவன் உள்பட மற்றவர்களை தேடி வருகின்றனர்.


கணவன் மீது முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Similar News