“எனது மனைவி தற்கொலை படை தாக்குதல் நடத்த வருகிறாள்” - டெல்லி விமான நிலையத்திற்கு மிரட்டல் விடுத்த நசிருதீன் கைது!!
“எனது மனைவி தற்கொலை படை தாக்குதல் நடத்த வருகிறாள்” - டெல்லி விமான நிலையத்திற்கு மிரட்டல் விடுத்த நசிருதீன் கைது!!
டெல்லி சிறப்பு காவல் படைக்கு கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி ஒரு மர்ம டெலிபோன் வந்தது. அதில் பேசியவன், “எனது மனைவி ஒருதற்கொலை படையைச் சேந்ர்தவள். அவள், இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்போகிறாள்” என்று கூறி உள்ளான்.
இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது. புதுடெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையஅதிகாரிகள் சர்வதேச விமானங்களின் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். பின்னர் அது புரளி என்பதுதெரியவந்தது.
இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் இந்திராகாந்தி விமான நிலையத்தில் வெடிகுண்டு வீசுவதற்காக தனது மனைவிவருவதாக அழைப்பு விடுத்த நபரை கைது செய்துள்ளனர்.
விசாரணையில், டெலிபோன் செய்து மிரட்டியவன் பெயர் நசிருதீன் (வயது 29 ) என்பதும் அவரது மனைவி ரபியா வெளிநாடுசெல்வதை தடுக்க திட்டமிட்டு இதை செய்துள்ளான் என்பதும் தெரியவந்துள்ளது.
நசிருதீன் புதுடெல்லியில் உள்ள பவானா பகுதியைச் சேர்ந்தவர். இவன், சென்னையில் பை உற்பத்தி தொழிற்சாலை வைத்துள்ளான். இவனது கம்பெனியில் ரபியா வேலை செய்துள்ளான். அப்போது ரபியா மீது நசிருதீனுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
ரபியா, அரபு நாட்டுக்கு சென்று வேலை செய்ய திட்டமிட்டுள்ளார். அது நசிருதீனுக்கு பிடிக்கவில்லை. அதை மீறி அவர் செல்ல முயன்றதால், அவரை தடுப்பதற்காக “அவள் மனித வெடிகுண்டாக வந்து விமான நிலையத்தில் தாக்கு நடத்தப்போகிறாள்” என்று கூறியதாக தெரிவித்துள்ளான்.
நசிருதீனை கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.