மருத்துவ பட்டமேற்படிப்புக்கான நீட் தேர்வில் பிற்பட்டோருக்கு இடமில்லையா? ஸ்டாலின் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக பா.ஜ.க பதிலடி !
மருத்துவ பட்டமேற்படிப்புக்கான நீட் தேர்வில் பிற்பட்டோருக்கு இடமில்லையா? ஸ்டாலின் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக பா.ஜ.க பதிலடி !
மருத்துவ
பட்டமேற்படிப்பு இடங்களுக்கு மாணவர்களைத் தேர்வு செய்யும் அகில இந்திய நீட்
தேர்வில், முன்னேறிய பிரிவினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு இட
ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ள நிலையில், பிற்படுத்தப்பட்டோருக்கான
இட ஒதுக்கீடு மட்டும் அறிவிக்கப்படவில்லை என ஸ்டாலின் உட்பட திமுகவினர் குற்றச்சாட்டுக்களை
மோடி அரசின் மீது கூறிவருகின்றனர்.
இந்த
குற்றச்சாட்டுகளுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நாராயணன்
திருப்பதி பதில் அளிக்கையில், இதே குற்றச்சாட்டை திமுக தான் அங்கம் வகித்த
மன்மோகன் தலைமையிலான ஆட்சியில் வலியுறுத்தாததேன் என்றும் இதற்காக திமுகவினர்
மன்னிப்பு கேட்பார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "பா.ஜ.க
மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே, மத்திய அரசு
அலுவலகங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான 27% இட ஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படுவதில்லை என்ற நிலையில், பொதுத் தொகுப்பில் உள்ள மருத்துவ இடங்களிலும் இட ஒதுக்கீட்டை
நிராகரிப்பது அந்த சமுதாயத்தை திட்டமிட்டு வஞ்சிக்கும் போக்காகும். அரசியல்
சட்டப்படி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டு உரிமையை தட்டிப் பறிப்பது
மாபெரும் மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்," என்று கூறியுள்ளார்.
இந்த விவகாரம்
குறித்து பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, "கடந்த 13 ஆண்டுகளாகவே அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட
பிரிவினருக்கு ஒதுக்கீடு இருந்ததாக தெரியவில்லை. திமுக அங்கம் வகித்த மன்மோகன்
சிங் அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம்தான் இது. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு
இட ஒதுக்கீடு 13 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருவதே உண்மை. இப்போது இது இல்லை என்று
கதறுபவர்கள் கடந்த 13 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டிருந்தார்கள்," என்று கேள்வி எழுப்பினார்.