உலக அளவில் வர்த்தகத்தில் BRICS நாடுகளின் பங்கு 15% மட்டுமே, இது அதிகரிக்க வேண்டும்- பிரதமர் நரேந்திர மோடி

உலக அளவில் வர்த்தகத்தில் BRICS நாடுகளின் பங்கு 15% மட்டுமே, இது அதிகரிக்க வேண்டும்- பிரதமர் நரேந்திர மோடி

Update: 2019-11-15 03:14 GMT

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க இரண்டு நாள் பயணமாக பிரேசில் சென்ற பிரதமர் மோடி அங்கு ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ,தென்னாப்பிரிக்கா, பிரேசில் அதிபர்  உள்ளிட்ட  நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடித்தார் அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி


பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். இன்ட்ரா-பிரிக்ஸ் வர்த்தகம் உலக வர்த்தகத்தில் 15% மட்டுமே. உலகின் பொருளாதார வளர்ச்சிக்கு தீவிரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக மோடி குறிப்பிட்டார். பெரும்பாலான தீவிரவாத செயல்கள் மதவாத இயக்கங்களால்தான் நடைபெறுகின்றன என்று கூறிய மோடி மதம் அடிப்படையாக இருக்கும் வரை தீவிரவாதத்தை துடைத்தெறிய முடியாது ,தீவிரவாதத்தால் வளரும் நாடுகளில் ஒரு ட்ரில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு சந்தித்துள்ளது  சமீப அறிக்கையில் 5 சதவீத அளவுக்கு தீவிரவாதத்தால் நஷ்டம் ஏற்பட்டதாக பிரதமர் கூறினார். தீவிரவாதத்தை எதிர்க்க பிரேசில் கூட்டமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்


பிரேசில் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, நேற்றிரவு தனி விமானம் மூலம் இந்தியா புறப்பட்டார்


Similar News