“அந்தநாள் ஞாபகம்” - ரஷ்யாவில், பிரதமர் வாஜ்பாயுடன், முதல்வர் நரேந்திர மோடி!!
“அந்தநாள் ஞாபகம்” - ரஷ்யாவில், பிரதமர் வாஜ்பாயுடன், முதல்வர் நரேந்திர மோடி!!
அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா சென்றுள்ளார். விளாடிவோஸ்டோக் நகர் சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்த மோடி, இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தியா - ரஷ்யா இடையே 25 ஒப்பந்தகங்கள் கையெழுத்தாகின.
இதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-
எனக்கு அழைப்பு விடுத்த புடினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் குஜராத் முதல்வராக இருந்த போது இங்கு வந்துள்ளேன். புடினை சந்தித்துள்ளேன்.
ரஷ்யாவுடனான இந்திய உறவு, வலுப்பெற்று வருகிறது. ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு அடிப்படையில், இரு நாட்டு உறவு உள்ளது.
ஏகே 203 ரக துப்பாக்கிகளை இரு நாடுகளும் இணைந்து தயாரிக்கும். ரஷ்யா உதவியுடன் விண்வெளி துறையில் இந்தியா புதிய உச்சத்தை எட்டும்.
சென்னை - ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகர் இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து ஒப்பந்தம் கையெழுத்தானது.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ரஷ்ய பயணம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோ தனது மலரும் நினைவுகளை இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 2001-ஆம் ஆண்டு அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, பிரதமர் வாஜ்பாயுடன் ரஷியா சென்றதை நினைவு கூர்ந்துள்ளார். இதுதொடர்பாக இரு புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த டுவிட்டர் பதிவில் பிரதமர் நரேந்திர மோடி, “20-வது இந்திய - ரஷிய உச்சி மாநாடு இன்று நடக்கிறது. இதில் நான் கலந்துகொண்டுள்ளேன். இப்போது, 2001 - ஆம் ஆண்டு இந்திய - ரஷிய உச்சி மாநாடு நினைவுக்கு வருகிறது. அப்போது பிரதமர் வாஜ்பாய் தலைமையில் இங்கு வந்த குழுவில் குஜராத் முதல்வர் என்ற முறையில் நானும் கலந்துகொண்டேன். அந்த பெருமையான நான் இன்று நினைவுக்கு வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.