செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது பெர்சவரன்ஸ் விண்கலம்.. முதல் புகைப்படத்தை வெளியிட்ட நாசா.!

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது பெர்சவரன்ஸ் விண்கலம்.. முதல் புகைப்படத்தை வெளியிட்ட நாசா.!

Update: 2021-02-19 10:40 GMT

உயிரினங்கள் வாழ்ந்த வரலாறுகளை ஆய்வு செய்வதற்காக செவ்வாய் கிரகத்திற்கு நாசாவின் ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியதாக நாசா அறிவித்துள்ளது. மேலும், விண்கலம் முதன் முதலாக எடுத்த புகைப்படங்களையும் நாசா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

அதாவது உயிரினங்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்ததா என்பது பற்றி ஆய்வு செய்வதற்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ‘பெர்சவரன்ஸ்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்து பூமிக்கு தகவல்களை அனுப்பும். அதன்படி விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது.

கடந்த ஆண்டு ஜூலை 30ம் தேதி நாசா விஞ்ஞானிகள், விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆராய்ச்சி முடிவில் பல உண்மைகள் வெளிவரும் என்று கூறப்படுகிறது. ஒரு வேளை செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான ஆவணங்கள் கிடைத்தால், விரைவில் மனிதர்கள் செவ்வாய் கிரகத்துக்கு செல்ல வாய்ப்பும் உள்ளது.

Similar News