கர்நாடகாவில் விரைவில் தேசிய குடிமக்கள் பதிவேடு?

கர்நாடகாவில் விரைவில் தேசிய குடிமக்கள் பதிவேடு?

Update: 2019-10-03 12:47 GMT

கர்நாடகாவில் உள்ள பாஜக அரசு மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) அறிமுகப்படுத்த பரிசீலித்து வருவதாக கர்நாடக மாநிலத்தின் உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.


"இந்தியா முழுவதும் என்.ஆர்.சி செயல்படுத்தப்படுவது தொடர்பாக மிகப் பெரிய பேச்சு நடந்து கொண்டிருக்கிறது. எல்லையைத் தாண்டி மக்கள் வந்து குடியேறும் மாநிலங்களில் கர்நாடகமும் ஒன்றாகும். இங்கே நிறைய சிக்கல்கள் உள்ளன. எனவே நாங்கள் அனைத்து தகவல்களையும் சேகரித்து வருகிறோம், நாங்கள் மத்திய உள்துறை அமைச்சருடன் கலந்துரையாடுவோம், பின்னர் இது குறித்து முடிவெடுப்போம். ”, என்று கர்நாடக மாநிலத்தின் உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை கூறினார்.


“நான் மூத்த அதிகாரிகளை தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த சட்டங்களை படிக்கச் கூறியிருக்கிறேன். பெங்களூரு மற்றும் பிற பெரிய நகரங்களில் வெளிநாட்டினர் வந்து குடியேறியுள்ளனர். அவர்கள் குற்றத்தில் ஈடுபடுவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரம்  தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) பற்றி  தெளிவான முடிவை எடுப்போம். ”, என்றும் அவர் கூறினார்.


எதிர்க்கட்சியில் இருந்தபோது, பெங்களூரில் அதிகரித்து வரும் பங்களாதேஷ் சட்டவிரோத குடியேற்றவாசிகள் குறித்து பாஜக குரல் எழுப்பியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாட்கள் முன்பு என்.ஆர்.சி நாடு முழுவதும் பரப்பப்படும் என்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரும் சட்ட வழிமுறைகள் மூலம் வெளியேற்றப்படுவார்கள் என்றும் வலியுறுத்தினார். இருப்பினும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான டி.எம்.சி அரசாங்கம் இந்த பயிற்சியை எதிர்த்ததுடன், மாநிலத்தில் இந்த நடவடிக்கையைத் தடுப்பதாக உறுதியளித்தது. என்.ஆர்.சி.யைப் புதுப்பிப்பதற்கான பயிற்சி மேற்கொள்ளப்பட்ட ஒரே மாநிலமான அசாமில், ஆகஸ்ட் 31 அன்று வெளியிடப்பட்ட இறுதி பட்டியலில் இருந்து 19 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.


Similar News