கோவையில் ஷனாபர்அலி வீட்டில் தேசிய பாதுகாப்பு முகமை (NIA) அதிரடி சோதனை!

கோவையில் ஷனாபர்அலி வீட்டில் தேசிய பாதுகாப்பு முகமை (NIA) அதிரடி சோதனை!

Update: 2019-08-29 02:16 GMT

தீவிரவாதிகள் ஊடுருவல் என்ற தகவலால் தமிழகம் முவதும் தீவிர கண்காணிப்பில் உள்ளது இந்த நிலையில் கோவையில் கமாண்டோ படைகள் குவிக்கப்பட்டிருந்தது.


இன்று கோவையில் 5 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை (என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.


கோவையில் உக்கடம், குனியமுத்தூர் உள்பட 5 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். உக்கடத்தில் #ஷனாபர்அலி என்பவரது வீட்டில் இன்று அதிகாலை 5 மணி முதல் சோதனை நடந்து வருகிறது. மேலும், 5 குழுக்களாக பிரிந்து, தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.





பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக வந்த தகவலையொட்டி சோதனை நடைபெறுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Similar News