“தேசியமும் தெய்வீகமும் இருப்பதால்தான் மத்தியில் மோடியும் மாநிலத்தில் எடப்பாடியும் ஆட்சி செய்கின்றனர்” – ராஜேந்திர பாலாஜி அதிரடி!!

“தேசியமும் தெய்வீகமும் இருப்பதால்தான் மத்தியில் மோடியும் மாநிலத்தில் எடப்பாடியும் ஆட்சி செய்கின்றனர்” – ராஜேந்திர பாலாஜி அதிரடி!!

Update: 2019-08-16 06:21 GMT
நாடு முழுவதும் 73-ஆவது சுதநதிர தினம் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில்சமபந்தி விருந்துகள் நடத்தப்பட்டன.
இந்த சிறப்பு  நிகழ்சிகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட அமைச்சர்கள் அங்கங்கே உள்ள கோயில்களில் நடதப்பட்ட சமபந்தி விருந்தில் கலந்துகொண்டு பக்தர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.

 
சென்னை திருவொற்றியூரில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சமபந்தி விருந்தில் தமிழக பால்வளத்துறை  அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பக்தர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசியலில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஒரு பஞ்சரான ட்யூப் போன்றவர். தேசியமும் தெய்வீகமும் மனதினில் இருப்பதால்தான் மத்தியில்மோடியும் மாநிலத்தில் எடப்பாடியும் ஆட்சி செய்கின்றனர்.
எந்த கட்சி வந்தாலும் அ.தி.மு.கதான் தமிழகத்தை ஆளும்.  திமுக வாழும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Similar News