கடற்படை தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்களுக்கு பார்வைக்கு திறந்து விடப்பட்ட இரண்டு போர்க் கப்பல்கள்
கடற்படை தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்களுக்கு பார்வைக்கு திறந்து விடப்பட்ட இரண்டு போர்க் கப்பல்கள்
ஒரிசா மாநிலத்தில் இரண்டு போர் கப்பல்களை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். விசாகப்பட்டினத்தில் இருந்து ஒரிசா துறைமுகத்திற்கு ராணா, கார்கில் இரண்டு போர் கப்பல்கள் வந்தன. கடற்படை தினம் டிசம்பர் 4ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள இந்த நிலையில் ஒரு வாரகாலம் இதில் பொதுமக்கள் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி நேற்று காலை முதலே இந்த கப்பல்களைக் கான குழந்தைகள், பெற்றோர், உட்பட பார்வையாளர்கள் பெருமளவில் திரண்டு வந்தனர். தொழில்நுட்பங்களை மாணவர்களுக்கு கடற்படை அதிகாரிகள் விளக்கினர். இந்த இரண்டு போர்க் கப்பல் ரானா ,கார்கில் இவை இரண்டும் இந்தியா பாகிஸ்தான் யுத்தத்தில் கராச்சி துறைமுகத்தை சுற்றி வளைத்தவள் என்பது குறிப்பிடத்தக்கது.