இந்துத்துவா ஏன் தேவைப்படுகிறது? ஒரு வரலாற்று பார்வை! #KathirIndic

இந்துத்துவா ஏன் தேவைப்படுகிறது? ஒரு வரலாற்று பார்வை! #KathirIndic

Update: 2019-10-13 06:38 GMT

வரலாற்றின் எல்லா காலங்களிலும் "மதங்கள் அது சார்ந்த நம்பிக்கைகள் தன்னை முன்னிறுத்தி மற்றவற்றை ஆக்கிரமிக்கவே முயற்சித்துக் கொண்டிருக்கிறது!"


எந்த ஒரு மத நம்பிக்கைகளையும் அது உருவான விதத்தையும், அது பயன்பாட்டில் இருக்கிற தன்மையையும் வைத்தே மதிப்பிட முடியும். மற்ற படி, எல்லா மதங்களையும் சரிசமமாக ஒரே தராசில் வைத்து எடை போடுவது தவறு. வேத காலமாகிய கி.மு. 1500 முதல் 600 வரை பலவகையான வழிபாடுகள், சடங்குகள், பழக்க வழக்கங்கள் வேதங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இது ஒரு நாளில் வந்ததல்ல, இந்த பலதரப்பட்ட நம்பிக்கைகளையும் வாழ்வியல் முறைகளையும் மாச்சர்யங்களற்று ஒருங்கிணந்து அரவணைக்கும் தன்மை கொண்ட ஒரு கலாச்சாரம் உருவாக பல நூற்றாண்டுகள் தேவைப்பட்டது.





இந்து மதத்தை பொறுத்த வரை புதிய சிந்தனைகள், புதிய கருத்துக்கள் ஏன் வழக்கத்தில் இருக்கும் ஒரு கருத்திற்கு மாற்று கருத்துக்களை கூட அது அனுமதிக்கிறது. மற்ற மதங்கள் ஒரு கட்டிறுக்கத்தோடு இருந்து வருகையில் இந்து மதம் நெகிழ்வுத்தன்மையோடு பல மாற்றங்களை ஏற்றுக்கொண்டு மாறுகின்ற காலங்களுக்கும், சமூக மாற்றத்திற்கும் ஏற்றவாறு மக்களுக்கு பயனளிக்கிறது. "காலத்திற்கு ஏற்றவாறு" மாறிக்கொள்ளவில்லை என்றால் நல்லது கூட தீயதாகிவிடும் என்று ஒரு பழமொழி கூட உண்டு.


இங்கு முக்கியமாக எழும் கேள்வி ஒன்று தான். இத்தனை சிறப்பு வாய்ந்த இந்து மதம் ஏன் இந்திய துணை கண்டத்தை தாண்டி விரிவடையாமல் போனது? அதற்கெல்லாம் மேலாக தன்னை காட்டிலும் வரலாற்றின் பிற்பகுதியில் தோன்றிய(1 முதல் 7-ஆம் நூற்றாண்டு வரை) மதங்களால் ஏன் அடிமைப்படுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டது.


இதற்கு முக்கியமான காரணம் மற்ற மதங்கள் வெறும் கட்டுப்பாடுகளால் நிறைந்திருந்த வேளையில் இந்து மதம் கருத்து பரிமாற்றங்களுக்கு இடம் அளித்தது. மற்ற மதங்கள் “மதங்கள்” என்பதையும் தாண்டி மக்கள் மனதை ஆக்ரமித்து அடிபணிய வைக்கும் தன்மை கொண்டதாக இருந்தது. மதங்கள் மதங்களாக மட்டுமில்லாமல் அரசியல் சாதனமாகவும் இருந்திருக்கிறது. இந்த புதிய மார்கங்கள் கொடூரமான வழிகளில் மத்திய கிழக்கு ஆசியாவில் அன்றைக்கு வழக்கத்தில் இருந்த "பாகன்" வழிபாட்டு முறைகளை அழித்து மெல்ல மெல்ல தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. அதன் பிறகு இந்து மதம் தழைத்து வளர்ந்து இந்திய துணைக்கண்டத்தின் பக்கம் அவர்கள் பார்வை திரும்பியது.


இஸ்லாமிய படையெடுப்புகள் 12-ஆம் நூற்றாண்டு தொடங்கி 16-ஆம் நூற்றாண்டு வரை இந்திய துணை கண்டத்தில் ஆப்கானிஸ்தான் பாக்கிஸ்தான் வரை பரவியது. டெல்லியில் சுல்தான்கள் ஆட்சி நடைபெற்ற போது இஸ்லாம் நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவியது. 1204-ஆம் வருடம் பக்தியார் சில்ஜி வங்காளம் வரையில் ஆட்சியை விரிவுப்படுத்தினர்.


இந்து மதத்தை பின்பற்றி வந்து இந்த துணைக்கண்டம், இப்படி தோல்வியுற்று  அடிமை படுத்தப்பட்டதற்கு காரணம், இந்து மதம் பெரும்பாலும் ஆன்மீக கடைத்தேற்றத்திற்காக மட்டுமே பயன்பட்டு வந்ததே தவிர, அரசியல் சார்ந்த தன்மை அதனிடத்தில் இல்லை. ஆனால் மற்ற மதங்கள் அதிகாரத்தின் மூலம் ஆட்சியமைப்பை ஏற்படுத்தும் தன்மையையும் பெற்றிருந்தன.


இந்து மதத்தையே எல்லா மன்னர்களும் பின்பற்றி வந்த நிலையிலும் தங்களுக்குள் எந்த ஒத்த குறிக்கோளும் இல்லாமல், எதிரிகளுடன் இணைந்து சக இந்து மன்னர்களுக்கு எதிராகவே சண்டையிடும் நிலையும் வந்தது. à®‡à®¨à¯à®¤à¯à®•à¯à®•à®³à¯ எல்லோரும் இணைந்து இயங்குகின்ற ஒரு மையக் குறிக்கோள் இல்லாமல் போனதே காரணம்.


ஆனாலும் இன்றும் இந்து மதம் முன்னர் இருந்ததை காட்டிலும் புதிய உயிர்ப்போடு இருக்கிறது. மற்ற மதங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பல நாடுகள், இன்று 100% ஆக்கிரமிப்பாளர்களின் மதங்களை தழுவிக்கொண்டன. ஆனால், இந்து மதம் இன்றும் இந்தியாவில் பெரும்பான்மையோர் பின்பற்றுகின்ற மதமாக இருக்கிறது. இதற்கு காரணம் இந்தியாவை ஆக்கிரமித்தவர்களின் பரந்தமனப்பான்மையோ நல்லெண்னமோ அல்ல அது "இந்துத்துவம்" என்னும் அரசியல் சார்ந்த வலிமைதான்.


சுதந்திர இந்தியாவின் 70 ஆண்டுகால வரலாற்றை மட்டும் வைத்து கொண்டு ஆயிரக்கணக்கான வருடங்கள் கடந்து வந்த இந்தியாவின் முழு வரலாற்றை சிலர் மறந்து விடுகிறார்கள்.


"வரலாறு நமக்கு பாடங்களை கற்று தருகிறது" அதிலிருந்து நாம் கற்று கொள்ளாவிட்டால் பழைய பாடங்களையே மீண்டும் படிக்க வேண்டிய நிலை வரும்.


சிலர் "இந்துத்துவ" அரசியல் என்பது ஏதோ ஜன சங்க காலத்தில் ஆரம்பித்ததாக நினைக்கிறார்கள். இன்னும் சிலர் நரேந்திர மோடி வந்த பின் தான் அது தொடங்கியது என்று நினைக்கிறார்கள். ஆனால் வரலாற்றை மேம்போக்காக படிப்பவர்களுக்கு கூட  "இந்துத்துவ" அரசியல் எதிர்ப்பு 18-ஆம் நூற்றாண்டில் மராட்டியர்கள் காலத்திலேயே இருந்ததது என்று உணர்ந்துக்கொள்ள முடியும்.


இந்து மதத்தை  புகழ்ந்துவிட்டு "இந்துத்துவத்தை" எதிர்ப்பதென்பது பிரம்ம தேவரை புகழ்ந்துவிட்டு அவர் படைப்பை எதிர்ப்பது போன்றது. ஏனெனில் வரலாறு கற்றுக்கொடுத்த பாடம் என்னவென்றால் இந்து மதம் உயிர்ப்புடன் இருப்பதற்கு  "இந்துத்துவ" கொள்கை நிலை நிறுத்தப்பட வேண்டும்.


ஒவ்வொறு தனி மனிதனையும் ஆன்மீகத்தில் முன்னேறுவதற்கான பாதையை வகுத்து தருவதுதான் இன்றும் "இந்து" மதத்தின் அடிப்படை தன்மையாக இருக்கிறது. ஆனால் இந்து இந்து மதம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் "இந்துதுவ" கொள்கை நிலை நிறுத்தப்பட வேண்டும். இந்து மதத்தின் பாதுகாப்பு "இந்துத்துவத்தை" சார்ந்தே இருக்கிறது.


Similar News