நீட் விலக்கு: “ஒப்புதல் வழங்க உத்தரவு பிறப்பிக்க முடியாது” - சென்னை ஐகோர்ட் கைவிரிப்பு !!
நீட் விலக்கு: “ஒப்புதல் வழங்க உத்தரவு பிறப்பிக்க முடியாது” - சென்னை ஐகோர்ட் கைவிரிப்பு !!
நீட் தேர்வில் விலக்கு கோரிய மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதலை பெற்று தர வேண்டும் எனக்கூறி தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட் முடித்து வைத்தது. மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக மத்திய அரசு அளித்த விளக்கத்தின் பேரில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், “ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க முடியாது. மசோதா திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வழக்கு தொடரலாம்” என்றனர்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், மசோதாக்களை திருப்பி அனுப்பியது குறித்து இதுவரை மத்திய அரசுக்கு 11 கடிதங்கள் எழுதப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.