இந்தியாவின் புதிய சி.ஏ.ஜி ஜே.பி.எஸ். சாவ்லா! ஜி.எஸ்.டியில் தொடங்கி டிஜிட்டல் இந்தியா வரை சாதித்து காட்டிய திறமைசாலி!

இந்தியாவின் புதிய சி.ஏ.ஜி ஜே.பி.எஸ். சாவ்லா! ஜி.எஸ்.டியில் தொடங்கி டிஜிட்டல் இந்தியா வரை சாதித்து காட்டிய திறமைசாலி!

Update: 2019-10-16 10:51 GMT

மத்திய நிதியமைச்சகத்தின் செலவினப் பிரிவில், ஜே.பி.எஸ். சாவ்லா புதிய தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக இன்று புதுடில்லியில் பொறுப்பேற்றார்.


1985 ஆம் ஆண்டின் இந்திய சிவில் கணக்கு சேவை அதிகாரி தொகுப்பைச் சேர்ந்த சாவ்லாவை, அக்டோபர் 15, 2019-லிருந்து இந்தப் பதவிக்கு முறைப்படியாக மத்திய அரசு நியமித்தது. இருப்பினும், தற்காலிகமாக செப்டம்பர் 1, 2019-லிருந்து இந்தப் பணியை அவர் செய்துவந்தார்.


34 ஆண்டு பணியில் அவர், பிரசார் பாரதி, நகர்ப்புற மேம்பாடு, விமானப் போக்குவரத்து, சுற்றுலா, வேளாண்மை உள்ளிட்டத் துறைகளில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக பொறுப்பேற்பதற்கு முன், மத்திய மறைமுக வரிகள் வாரியம் மற்றும் சுங்கத்துறையின் முதன்மைத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியாக திரு.சாவ்லா பணியாற்றினார்.


ஜிஎஸ்டி வலைப்பின்னல் செயல்பாட்டையும், கணக்கு நடைமுறையையும் இறுதி செய்வதில் பெரும் பங்கு வகித்தவர். தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலகத்தின் இணையப் பக்கத்தில் உள்ள பொது நிதிநிர்வாக முறையின் மூலம் மத்திய அரசின் அனைத்து வரவு மற்றும் பணம் வழங்கலை டிஜிட்டல் மயமாக்கும் முடிவின் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி திருப்பிக் கொடுப்பதை சிபிஐசியுடன் ஒருங்கிணைப்பதில் இவர் முக்கியப் பங்காற்றியவர்.


Similar News