ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 14.24 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் - எதிர்கட்சிகளின் பொய்யுரைகளை நீர்த்து போகச்செய்யும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் அறிவிப்பு!

ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 14.24 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் - எதிர்கட்சிகளின் பொய்யுரைகளை நீர்த்து போகச்செய்யும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் அறிவிப்பு!

Update: 2019-09-27 13:07 GMT

ESIC ஓய்வூதிய அமைப்பான Employees' Provident Fund Organisation (EPFO) மற்றும் Pension Fund Regulatory and Development Authority (PFRDA) ஆகியவை செயல்படுத்தி வரும் பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களில் சேரும் புதிய சந்தாதாரர்களின் ஊதிய தரவு ஆகியவற்றின் அடிப்படையில் தேசிய புள்ளியியல் அலுவலகம் (National Statistical Office) புதிய வேலைவாய்ப்பு தொடர்பான நிலவரத்தை வெளியிட்டுள்ளது.


National Statistical Office வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில்,


2019 ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 14.24 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளது. இது ஜூன் மாதத்தை காட்டிலும் அதிகமாகும். 2019 ஜூன் மாதத்தில் புதிதாக 12.49 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைத்து இருந்தது.


2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்  2019 ஆம் ஆண்டு  ஜூலை வரை ESI திட்டத்தில் புதிதாக 2.83 கோடி சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நம் நாட்டில் வேலைவாய்ப்பு நிலவரம் பல பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறி வரும் வேளையில், கடந்த ஜூலை மாதத்தில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தகவல் உண்மை நிலவரத்தை உணர்த்தியுள்ளது.


Similar News