புரட்சியை ஏற்படுத்திய புதிய மோட்டார் வாகனச் சட்டம்! டெல்லியில் போக்குவரத்து குற்றங்கள் 66% குறைந்துள்ளன!!

புரட்சியை ஏற்படுத்திய புதிய மோட்டார் வாகனச் சட்டம்! டெல்லியில் போக்குவரத்து குற்றங்கள் 66% குறைந்துள்ளன!!

Update: 2019-10-05 06:08 GMT


மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய வாகன சட்டம் டெல்லியில் தீவிரமான முறையில் அமல் படுத்தப்பட்டது. சாலை விதி மீறல்களுக்காக கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட மொத்த சலான்கள் 13,281 எனவும் ஆனால் இந்த ஆண்டில் அதே கால கட்டத்தில் வெளியிடப்பட்ட சலான்களின் எண்ணிக்கை வெறும் 3,366 சலான்கள் மட்டுமே என டெல்லி போலீசார் கூறினார்.


இதற்கான காரணம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட புதிய போக்குவரத்து சட்டத்தை மிக தீவிரமாக தேசத்தின் தலைநகரான டெல்லியில் அமல் படுத்தியதுதான் எனவும் அவர்கள் பெருமிதத்துடன் புள்ளி விபரங்களுடன் கூறினர். புதிய மோட்டார் வாகன சட்டம் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை கணிசமாக உயர்த்தியது மிக முக்கிய காரணமென்றும் அவர்கள் கூறினர்.


இது குறித்து டெல்லி மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் : கடந்த வருடம். புதிய எம்.வி சட்டம் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டம் போக்குவரத்து மீறல்கள் மீதான அபராதங்களை கணிசமாக உயர்த்தியது. இதனால் தலைநகரில் போக்குவரத்து விதிமீறல்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மட்டும் 66 சதவீதம் குறைந்துள்ளது.


"செப்டம்பர் 2018 இல், மொத்தம் 5,24,819 சலான்கள் வழங்கப்பட்டன, அதே நேரத்தில் 2019 செப்டம்பரில் 1,73,921 சலான்கள் மட்டுமே பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதற்காக வெளியிடப்பட்டுள்ளன" என்றார்.


இந்த ஆண்டு அதிக வேகத்தில் வாகனங்களை இயக்கிய குற்றத்துக்காக 3,366 சலான்கள் மட்டுமே காவல்துறையினரால் வழங்கப்பட்டன. ஆனால் கடந்த ஆண்டு இதே மாதத்தில் இதே குற்றத்துக்காக 13,281 சல்லான்கள் வழங்கப்பட்டன. இதேபோல், 2018 ஆம் ஆண்டில் 3 பேர் அமர்ந்து செல்லும் விதி மீறல் சவாரிக்கு 15,261 சல்லான்கள் வழங்கப்பட்டன, இது 2019 இல் 1,853 ஆகக்குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஹெல்மெட் இல்லாமல் சவாரி செய்ததற்காக மொத்தம் 1,04,522 சலான்கள் வழங்கப்பட்டன, இது 2019 இல் 21,154 ஆகக் குறைந்தது.


 à®‡à®¤à®¿à®²à¯ வேடிக்கை என்னவென்றால் மத்தியில் உள்ள பாஜக அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்த போதிலும் மற்ற பாஜக ஆளும் மாநிலங்களில் அந்த அரசுகளே புதிய சட்டத்தை அமல்படுத்தக தயங்கின. அனால் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டினார். இந்த சட்டம் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை பரப்பும் என்றும் இது தேசிய நலன் தொடர்பான ஓன்று என்று உறுதிபடக் கூறினார் அவர்.


"இந்த செயல் வருவாயை உயர்த்துவதற்காக அல்ல. மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கும், அகால மரணங்கள் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தியை இழப்பதைத் தடுப்பதற்கும் ஆகும்" என்று கட்கரி கூறியிருந்தார்.


கடுமையான அபராதம் நடைமுறைக்கு வந்த பிறகு, ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு அதிக பாரம் ஏற்றிய ஒரு லாரிக்கு டெல்லி போக்குவரத்துத் துறையின் அமலாக்கப் பிரிவால் ரூ .1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மற்றொரு சம்பவத்தில், ஒரு டிரக்கின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் வெவ்வேறு விதி முறைகள் மீறல்களுக்காக தேசிய தலைநகரில் மொத்தம் ரூ. 2 இலட்சம் அபராதத் தொகை கட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.


This is a Translated Article From TIMES NOW NEWS


Similar News