சாஹோ படத்தின் புதிய பாடல் வெளியீடு!!
சாஹோ படத்தின் புதிய பாடல் வெளியீடு!!
மூன்று பாடல்களும் பிரம்மாண்டமாக கண்களை பறிக்கும் அளவிற்கு காட்சிப் படுத்தப் பட்டிருக்கிறது.
இதன்பாடல் வெளியிட்டு விழாவில் சாஹோ படக்குழிவினர் பிரபாஸ், தயாரிப்பாளர் பிரமோத், மதன் கார்கி மற்றும் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய
மதன் கார்கி…
“பிரபாஸ் உடன் பாகுபலி படத்தில் பணியாற்றியதே எனக்கு மிகுந்த சந்தோஷாத்தைக் கொடுத்தது. மீண்டும் தற்பொது பிரபாஸுடன் பணியாற்றியது எனக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன். என் பாடல்களை மொழிபெயர்ப்பு செய்யாமல், எனக்கு முழு சுதந்திரம் கொடுத்த இயக்குனர் சுஜீத் அவர்களுக்கு இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு தனிப்பட்ட வகையில் மிகவும் பிடித்த பாடல் மழையும் தீயும் என்ற பாடல். மேலும் பிரபாஸின் இப்படம் மிகப்பெரிய வெற்றியடைய அவர்களை வாழ்த்துகிறேன். மேலும் அவர் நடிக்கும் ஹாலிவுட் படத்தில் பணியாற்ற எனக்கு சீக்கிரம் தகவல் சொல்லி அனுப்புங்கள். ” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
“பேட் பாய்ஸ்” பாடலை எழுதிய இயக்குனர் விக்னேஷ் சிவன் பேசும் பொழுது,
“சாஹோ திரைப்படம் இந்திய சினிமாவிற்கும் ஹாலிவுட் சினிமாவிற்கும் ஒரு பாலமாக அமைந்துள்ளது. இப்படி ஒரு படத்தில் பணியாற்றியது எனக்கு கிடைத்த பெரு வாய்ப்பாக நினைக்கிறேன். சாஹோ படம் பிரம்மாண்டமாக வெற்றிப் பேர படக்குழுவினரை வாழுத்துகிறேன்.” என்று கூறினார்.
இயக்குனர் சுஜீத் பேசுகையில்,
“என்னை நம்பி இப்படி ஒரு பிரம்மாண்டமான படத்தை தயாரித்ததற்கு வம்சி மற்றும் பிரோமோத் அண்ணாவிற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். நடிகர் பிரபாஸ் அண்ணாவுடன் பணியாற்றியது சிறுவர்களுடன் அமர்ந்து முதல் முறையாக 3D படம் பார்ப்பது போல் இருந்தது. இப்படத்தில் நாங்கள் இருவரும் அண்ணன் தம்பியைப் போல் பழகினோம். நான் பெரும்பாலான நேரங்களில் அவரது வீட்டிலேயே தங்கிவிட்டேன். நானும் அவரது வீட்டிலேயே தங்கி விடுகிறேன் என்று என் அம்மா என்னை பலமுறை கேளி செய்திருக்கிறார். சாஹோ படத்தில் இடம் பெற்ற பாடலின் தமிழ் அர்த்தம் எனக்கு சரியாக தெரியாது. அது தெரிந்த பின்பு, கதையின் முழு அர்த்தமும் பாடல் வரிகளில் நிரப்பப் பட்டிருப்பதை உணர்ந்தேன். இப்படியொரு பாடல் வரிகளை தந்ததற்கு மதன் கார்கி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விக்னேஷ் சிவன் எனது சகோதரர் போல, அவர் எழுதிய பாடல் வரிகள் ஆச்சரியமாக இருந்தன. மேலும் ஷங்கர் மகாதேவன் அவர்கள் மிகவும் சிறப்பாக பாடியிருக்கிறார் அவருக்கும் நன்றி.” என்று கூறினார்.
இறுதியாக நடிகர் பிரபாஸ் பேசுகையில், “உண்மையெது பொய்யெது பாடலின் ஒரு பகுதியை வெளியிட்டிருக்கிறோம். இப்படத்தின் முக்கியக் கருத்தை இப்பாடல் வெளிப்படுத்துகிறது. பாகுபலி படத்திலிருந்தே எனது நெருங்கிய நண்பராக இருந்த மதன் கார்க்கியும், ஷங்கர்-எஹ்சன்-லாயும் எனக்கு சிறப்பான பாடல்களை தந்துள்ளனர். ” இப்படம் பாகுபலி போன்று அனைவரையும் கவரும்படி இருக்கும் என்று நெகிழ்ச்சியுடன் பேசினார்.
படக்குழுவினர் பேசி முடித்த பிறகு படத்தின் “உண்மையெது பொய்யெது” பாடல் ஒலிபரப்பப் பட்டது. பத்திரிக்கையாளர்களும் ஊடகத்தினரும் இப்படத்தில் பாடலை ரசித்துப் பார்த்து வெகுவாக பாராட்டினார்கள்.
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் இந்த வருடம் ஆகஸ்ட் 30ஆம் தேதி “சாஹோ” திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.