சிக்கிமில் பாஜகவுக்கு புதிய பலம்! 10 எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் நட்டா முன்னிலையில் இணைந்தனர் !!

சிக்கிமில் பாஜகவுக்கு புதிய பலம்! 10 எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் நட்டா முன்னிலையில் இணைந்தனர் !!

Update: 2019-08-13 13:11 GMT


சிக்கிம் மாநிலத்தில் மாநில கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஆட்சியில் உள்ளது. சிக்கிம் ஜனநாயக முன்னணி எதிர்க்கட்சியாக உள்ளது. 


 இந்நிலையில், எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் இன்று பாஜகவில் இணைந்தனர். 


டெல்லியில் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பொதுச்செயலாளர் ராம் மாதவ் ஆகியோர் முன்னலையில் அக்கட்சியில் இணைந்தனர்.


 தற்போது, 10 எம்எல்ஏக்கள் இணைந்திருப்பதால் பாஜகவின் பலம் அதிகரித்துள்ளதுடன், எதிர்க்கட்சியாகும் வாய்ப்பையும் பெற்றுள்ளது. வடகிழக்கு மாநிலங்களைப் பொருத்தவரையில், பாஜக அதிகாரத்தில் இல்லாத ஒரே மாநிலம் சிக்கிம் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற தேர்தலில் பாஜக 3 வது இடத்தில் வாக்குகளை பெற்றிருந்தும் ஒரு இடத்தில் கூட வெற்றி வாய்ப்பை பெறமுடியவில்லை.


Similar News