டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு புதிய அணிகள் தகுதி!!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு புதிய அணிகள் தகுதி!!

Update: 2019-10-29 06:02 GMT

அடுத்த ஆண்டு நடைபெறவிற்கும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு புதிதாக அயர்லாந்து மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் தகுதி பெற்றுள்ளது.


7-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2020-ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதில் 16 அணிகள் பங்கேற்கிறது மேலும் தரவரிசை பட்டியலில் இருக்கும் முதல் 10 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளது.


தகுதி சுற்றில் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ‘ஏ’ பிரிவில் ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, நமிபியா, சிங்கப்பூர், கென்யா, பெர்முடா ஆகிய அணிகளும் மற்றும் ‘பி’ பிரிவில் ஐக்கிய அரபு அமீரகம், அயர்லாந்து, ஓமன், ஹாங்காங், கனடா, ஜெர்சி, நைஜீரியா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளது.


லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது இதில் தற்போதைக்கு பப்புவா நியூ கினியா மற்றும் அயர்லாந்து அணிகள் நேரடியாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.


Similar News