மோடி அரசின் தொடரும் இன்ப அதிர்ச்சி! தமிழகத்திற்கு 6 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய நிலையில், மேலும் 3 மருத்துவக்கல்லூரிகள்!

மோடி அரசின் தொடரும் இன்ப அதிர்ச்சி! தமிழகத்திற்கு 6 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய நிலையில், மேலும் 3 மருத்துவக்கல்லூரிகள்!

Update: 2019-11-27 09:10 GMT

சமீபத்தில் தமிழகத்திலுள்ள திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 6 மருத்துவ கல்லூரிகளை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி அரசு ஒப்புதல் வழங்கி இருந்தது. இந்த மருத்துவக் கல்லூரிகள் தலா, 395 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளன.


ஒரே நேரத்தில் ஆறு மருத்துவக் கல்லூரிகள், ஒரு மாநிலத்திற்கு வழங்குவது இதுவே முதல்முறை என்று தமிழர்கள் பெருமையோடு மோடியைக் கொண்டாடினர்.


தமிழர்களின் இந்த மகிழ்ச்சி மறைவதற்குள், மேலும் 3 மருத்துவ கல்லூரிகளை தமிழகத்திற்கு வழங்கி பிரதமர் மோடி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். தமிழகத்திலுள்ள திருவள்ளூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் ஆகிய 3 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் அமைய உள்ளன. இந்த 3 மருத்துவ கல்லூரிகளும், தலா 325 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளன.


மத்திய சுகாதார துறை அமைச்சகம் இதனைத் தெரிவித்துள்ளது.


Similar News