பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் கபடி போட்டிகள்.. உள்ளூர் விளையாட்டுகளை மெருகேற்றும் செயல்..

Update: 2023-12-18 01:54 GMT

மதுரை மாவட்டம் தனக்கன்குளத்தில் பாஜக விவசாய அணி சார்பில் கபடி போட்டி நடைபெற்றது. இதன் சிறப்பு பரிசாக ஒரு லட்சம் மற்றும் 50 ஆயிரம் ஊக்க தொகையாக சிறந்த அணிக்கு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அடுத்தது ராமநாதபுரத்தில் பாஜக மாவட்ட விவசாய அணி சார்பில் ராஜா பள்ளி பகிதானத்தில் மாவட்ட அளவிலான நமோ கபடி போட்டி நடைபெற்றது. குறிப்பாக பாஜக தரப்பினர் தற்போது நவோ கபடி போட்டிகளை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட தலைவர் தாரணி முருகேசன் இந்த ஒரு நிகழ்ச்சியில் தலைமை வகித்தார். விவசாய அணி மாநில பொது செயலாளர் பிரவீன் குமார், மாவட்ட பார்வையாளர் திரவிய பாண்டியன் முன்னிலையில் இந்த ஒரு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது.


இதில் பாஜக விவசாய அணி பேராவூர், வன்னிக்குடி, கொடிக்குளம், கீழத்துறை, சத்திரக்குடி, தலையூர் உள்ளிட்ட 24 அடிகள் மொத்தமாக பங்கேற்றன. முதல் பரிசாக வெற்றி பெற்ற அணிக்கு 20 ஆயிரம் ரூபாய் மற்றும் இரண்டாம் பரிசாக 15 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக 10,000 மற்றும் நான்காம் பரிசாக ரூபாய் 10,000 மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.


பாஜக மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் என பலரும் இந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்கள். அவர்களது பாஜக சார்பில் நமோ நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பாஜக நடத்திய நமோ கபடி இளைஞர்கள் மத்தியில் தற்பொழுது சிறப்பான பெயரை பெற்று வருகிறது. உள்ளூர் கபடி வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த ஒரு நிகழ்ச்சி நடைபெற்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy:



Tags:    

Similar News