மதமாற்ற சதி முறியடிப்பு.. இந்து முன்னணியினர் கொடுத்த தகவல்..

Update: 2024-05-17 15:07 GMT

மதமாற்றம் என்பது தற்போது பெரிய அளவில் நிகழ்ந்து வருகிறது குறிப்பாக வட மாநிலங்களில் அதிக அளவு இதுபற்றி நாம் செய்திகளை கேட்டு இருப்போம். ஆனால் தற்போது தமிழகத்திலும் தொடர்ச்சியான வண்ணம் மத மாற்றும் முயற்சிகள் நடந்து வருகிறது. குறிப்பாக ஏழை மக்களை குறிவைத்து மதமாற்றுவதற்கான கும்பலைகளை மிஷனரிகள் அனுப்புவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.


அந்த வகையில் தற்பொழுதும் மதமாற்றத்தை குறிவைத்து சண்டை கிளாஸ் என்ற பெயரில் வகுப்புக்கள் நடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது உடனே இந்து முன்னணியினர் விரைவாக நடவடிக்கை எடுத்து அதை முறியடித்து இருக்கிறார்கள் இது பற்றி அவர்கள் சமூக வலைத்தளங்களில் குறிப்பிடும் பொழுது, "மதுரை மாநகர், கீறத்துறை நகர் பகுதியில் சில கிறிஸ்தவர்கள் இயேசு நல்லவர் உலகத்தை காக்க வந்திருக்கிறார் என்று இந்து மதத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகளை அழைத்துச் சென்று 'சண்டே கிளாஸ்' அப்பகுதியில் நடத்தி வந்தனர்.

இந்து முன்னணி பொறுப்பாளர்களுக்கு தகவல் தெரிந்த உடனே அங்கு சென்று ' சண்டே கிளாஸ் தடுத்து நிறுத்தப்பட்டது. பிறகு கீரைத்துறை காவல் நிலையத்தில் புகார் செய்து அவர்கள் மீது FIR போடப்பட்டு, அந்த குழந்தைகளை பத்திரமாக அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்" என்று கூறி உள்ளனர்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News