தரமற்ற திமுக அரசின் இலவச சைக்கிள்கள்! மறு விற்பனை கடைகளில் முடியும் அவலம்!

Update: 2024-06-30 11:54 GMT

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்து பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற இலவச சைக்கிள்கள் தரம் குறைந்ததாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. மேலும் தரம் குறைந்த மிதிவண்டியை சரி செய்வதற்கு ஆகின்ற செலவிற்கு பதிலாக, அவற்றை விற்றே விடலாம் என பலர் மறு விற்பனை கடையில் திமுக அரசு வழங்கிய சைக்கிள்களை விற்று விட்டுச் செல்கின்றனர். 

அதாவது கோயம்புத்தூரில் உள்ள செல்வபுரம் மற்றும் செட்டி தெருவில் அமைந்துள்ள கடைகளில் திமுக அரசு வழங்கிய ஏராளமான சைக்கிள்கள் மறு விற்பனைக்கு வரிசையாக நின்றுள்ளது! இதில் ஆண், பெண் என இருபாலரும் பயன்படுத்தும் சைக்கிள்கள் இருந்ததோடு, ஆண்கள் பயன்படுத்தும் சைக்கிள்கள் ரூபாய் 2,000 முதல் 2,300 வரையிலும், பெண்கள் பயன்படுத்தும் சைக்கிள்கள் ரூபாய் 1,800 முதல் 2,000 வரையிலும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒரு மிதிவண்டி கடையின் உரிமையாளரிடமும் செய்தியாளர்கள் தரப்பில் கேட்கப்பட்ட பொழுது, அரசு தரப்பில் கொடுக்கப்படும் சைக்கிள்கள் தரமற்றவையாக உள்ளது.

அதனால் பழுது பார்ப்பிற்கு பணத்தை செலவழிப்பதற்கு பதிலாக அவற்றை விற்கிறார்கள். பல சைக்கிள்களில் பிரேக், சக்கரத்தின் விளிம்புகள், கிழிந்த டியூப்கள் மற்றும் சரியாகப் பொருத்தப்படாத இருக்கை கவர்கள் என அனைத்தும் பழுதடைந்து உள்ளது. இவை அனைத்தையும் சரி செய்து மாணவர்கள் பாதுகாப்பாக இயக்கி செய்வதற்கு கிட்டத்தட்ட 700 ரூபாய் வரை செலவாகும். இதனால் இதற்கு பதிலாக மொத்த சைக்கிளையும் விற்பனை செய்து செல்கிறார்கள். அரசு தரப்பில் தரமான சைக்கிள்கள் வழங்கப்பட்டிருந்தால் குறைவான மாணவர்களே விற்பனை செய்வார்கள் என்று மிதிவண்டி கடையின் உரிமையாளர் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் மற்றொரு கடை உரிமையாளரிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேட்கும் பொழுது, மதுவுக்கு அடிமையாகி போராடும் சில தந்தைகள் மதுபானம் வாங்குவதற்காக தமது மகள்களின் சைக்கிளை விற்பதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, விலையில்லா மிதிவண்டி திட்டத்தின் நோக்கம் கிராமப்புற மாணவர்களின் வழக்கமான பள்ளி வருகையை ஊக்குவிப்பதற்கே முக்கியமாக தொடங்கப்பட்டது. ஆனால் சைக்கிள்களின் தரம் குறைந்ததால் பல மாணவர்கள் அவற்றை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையால் கடையின் உரிமையாளர்கள் பயனடைகிறார்கள் என்று அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தரப்பில் கருத்துகள் எழுந்துள்ளது. 

இந்த வரிசையில், தரமற்ற மிதிவண்டிகள் பிரச்சனை மாநிலம் முழுவதும் பரவலாகவே உள்ளது. மாணவர்களுக்கு தரமான மிதிவண்டிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறையை வலியுறுத்தியுள்ளார் தமிழ்நாடு ஆசிரியர் மற்றும் பள்ளி பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ஆர். ராம்குமார். 

மேலும் திமுக அரசு கொடுக்கும் மிதிவண்டிகள் தான் பழுதடைந்து உள்ளது என அவற்றை விற்பனை செய்து அரசு பேருந்துகளில் பல மாணவர்கள் பள்ளிக்குச் செல்கிறார்கள். ஆனால் அரசு பேருந்துகளும் இந்த திமுக ஆட்சியில் முறையானதாக இல்லை, எந்த நேரத்தில் எந்த அரசு பேருந்தில் எந்த விபரீதம் ஏற்பட்டு,  நடுரோட்டில் நிற்கும் என்று தெரியாத நிலை தான் தமிழகத்தில் நிலவுகிறது என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. 

Source : The Commune 

Tags:    

Similar News