கிராமப்புற இந்தியாவின் டிஜிட்டல் உருமாற்றம்: சத்தமில்லாமல் வேலை செய்யும் மத்திய அரசு!

Update: 2024-11-01 10:55 GMT

கிராமப்புற இந்தியாவில் டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதற்கும், டிஜிட்டல் சேவைகள் மக்கள் ஒவ்வொருவரையும் சென்றடைவதை உறுதி செய்வதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், டிஜிட்டல் இந்தியா பொது சேவை மையம் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த முயற்சி 10 மாவட்டங்களில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் ஒன்றேபோல் டி.ஐ.சி.எஸ்.சி மையத்தை நிறுவவும், மொத்தம் நாடு முழுவதும் 4,740 மையங்கள் ஏற்படுத்தவும் வழிவகை செய்யும்.


குறிப்பாக, உத்திரப்பிரதேசத்தில் உள்ள பிலிபித் மாவட்டத்தில் 720 டி.ஐ.சி.எஸ்.சி மையங்களும், கோரக்பூரில் 1,273 மையங்களும் அமைக்கப்படும். மகாராஷ்டிராவில் 870, இமாச்சலப் பிரதேசத்தில் 309, தெலுங்கானாவில் 589, குஜராத்தில் 288, மிசோரமில் 100 மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 81 டி.ஐ.சி.எஸ்.சி மையங்கள் இதில் அடங்கும். இந்த மையங்களின் செயல்பாடு மற்றும் மையப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப கண்காணிப்பு இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா நிறுவனத்தின் மூலம் நிர்வகிக்கப்படும்.

ரூ.3,160.88 லட்சம் பட்ஜெட்டில், இந்தத் திட்டம் ஆரம்பத்தில் ஆறு மாதங்களுக்கு இயங்க உள்ளது. அதை ஒன்பது மாதங்களுக்கு நீட்டிக்க வாய்ப்புள்ளது. கிராமப்புற மக்களுக்கு நிதி மற்றும் வணிக சேவைகளுடன் அத்தியாவசிய மின்-ஆளுமை சேவைகளை வழங்கும் ஒருங்கிணைந்த தளத்தை உருவாக்குவதே முதன்மை குறிக்கோளாகும். பிலிபித்தில் உள்ள சி.எஸ்.சி மையங்கள் ஆதார் பதிவு, வங்கி, நிதி திட்டமிடல், தொலை தூர சட்ட ஆலோசனை, தொலை மருத்துவ ஆலோசனை, கல்வி மற்றும் இ-காமர்ஸ் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும். கூடுதலாக, அரசின் திட்டங்களை ஊக்குவிக்கவும், தொலைதூரப் பகுதிகளுக்கு அத்தியாவசிய சேவைகளை நேரடியாக வழங்கவும் ஜி.பி.எஸ் இயக்கப்பட்ட மொபைல் வேன்கள் பயன்படுத்தப்படும்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News