அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமான விபத்து:பிரதமர் மோடி விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டார்!
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜூன் 13 அகமதாபாத் வந்து ஏர் இந்தியா விமான விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டார் நேற்று ஜூன் 12 அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளான போயிங் 787-8 விமானம் 242 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்றது ஆனால் எதிர்பாராத விதமாக விமானம் பயணிக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே விபத்தை சந்தித்தது
இந்த விபத்தில் 241 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன மேலும் இந்த துயர விபத்தில் உயிரிழந்தவர்களில் பாஜக மூத்த தலைவரும் குஜராத் முன்னாள் முதல்வருமான விஜய் ரூபானியும் ஒருவர் மேலும் விமான பயணத்தில் 169 இந்தியர்கள் 53 பிரிட்டிஷ் பிரஜைகள் ஏழு போர்த்துகீசியர்கள் மற்றும் ஒரு கனடியர் இருந்தனர் ஆனால் இவ்விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் நாட்டவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டதோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டிஷ் நாட்டவரை சந்தித்ததோடு விபத்தில் காயம் அடைந்த மாணவர்களையும் நேரில் சந்தித்தார்
தற்பொழுது பிரதமர் நரேந்திர மோடி விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு விடுதி மாணவர்களை சந்தித்து விபத்தில் உயிர் பிழைத்த இளைஞரையும் சந்தித்துள்ளார்