வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த பாதிரியார்!! நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

Update: 2025-09-11 14:22 GMT

திருப்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஊத்​துக்​குளி பல்​ல​க​வுண்​டம்​பாளை​யம் என்ற பகுதியைச் சேர்ந்த கூனம்பட்டியில் ஆதரவற்ற பள்ளி மாணவர்களுக்கான காப்பகத்தை அதே பகுதியைச் சேர்ந்த ஆண்ட்​ரூஸ் என்ற 50 வயதுடைய பாதிரி​யார் நடத்தி வந்துள்ளார். 

இந்த காப்பகத்தில் 20ம் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் தங்கி படித்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் காப்பகத்தில் தங்கி படித்து வந்த 14 வயதுடைய சிறுமிக்கு பாதிரி​யார் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து உடல்நல குறைபாட்டால் வீட்டிற்கு சென்ற சிறுமி அவருடைய தாயாரிடம் இது பற்றி கூறியுள்ளார். 

இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாயார் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆண்ட்​ரூஸை போலீசார் கைது செய்து திருப்பூர் மாவட்ட மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். 

மேலும் நீதிமன்றத்தில் நீதிபதி கோகிலா முன்பு இந்த வழக்கு வந்த நிலையில் பாதிரி​யார் ஆண்ட்​ரூஸ்க்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையும் 10,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி தற்போது பாதிரி​யார் ஆண்ட்​ரூஸ் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

Tags:    

Similar News