தாவெக தலைவர் விஜய்க்கு எழுந்த மிரட்டல்! கரூரில் ஏற்பட்ட விபரீதத்தில் அரசியல் சதி உள்ளதா?
கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட விபரீதத்தால் 41 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் இதில் ஏதேனும் அரசியல் சதி இருக்கிறதா என்று பொதுமக்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்துவதற்கு சிபிஐக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்று பலரும் கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில் அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளரான ஏ.என்.எஸ்.பிரசாத் கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து திமுக அரசு கண்துடைப்பதற்காக முன்னால் உயர் நீதிமன்ற நீதிபதியான அருணா ஜெகதீசன் என்பவரின் தலைமையில் விசாரணை நடத்துவதற்கு நியமித்தும் எந்தவித பயனும் இல்லாமல் இருப்பதால் விரைவில் இந்த விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.
மேலும் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி பிரேத பரிசோதனை செய்யும் பொழுது வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் அதில் வரும் நம்பிக்கையை தமிழக அரசு வெளிப்படையாக கூற வேண்டும் என்று கூறினார்.
இந்நிலையில் தாவெக சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் இந்த கோர சம்பவத்தில் உள்ளூர் அரசியல்வாதிகளின் சதி இருக்கிறதா என்பது பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடத்த வேண்டும் என்றும், தொடர்புள்ள அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவதற்காகவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்த விசாரணை தற்பொழுது ஏடிஎஸ்பி பிரேமானந்தன் தலைமையில் மாற்றப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து திமுக கட்சியை எதிர்த்து செயல்பட்டால் இதுபோன்று பல விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆன ராகுல் காந்தி விஜய்க்கு எச்சரித்ததாகவும், அதனால் அவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் அரசியல் சதி ஏதும் உள்ளதா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்த உண்மையை விரைவில் தமிழக பாஜக கண்டுபிடிக்கும் என்று கூறியுள்ளார்.