பாஜகவை நோக்கி நகரும் கிறிஸ்தவர்கள்!! முன்னாள் டிஜிபி ஆர்எஸ்எஸில் இணைந்தாரா?

Update: 2025-10-02 07:58 GMT

ஆா்எஸ்எஸ் நூற்றாண்டு விழா புதுடெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் கோலாகலமாக நடைபெற்ற முடிந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்நிலையில் வட இந்தியாவில் இருக்கும் பல பகுதிகளிலிருந்து கிறிஸ்தவர்கள் பாஜகவிற்கு வந்து கொண்டு உள்ளனர்.

இதுபோல தொடர்ச்சியாக பல இடங்களில் இருந்து கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள் ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜகவிற்கு வந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் கேரள காவல்துறையின் முன்னாள் டிஜிபி ஆன ஜேக்கப் தாமஸ் ஆர்.எஸ்.எஸில் முழுநேர பிரச்சாரகராக இணைந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் பேசியபோது தான் பல ஆண்டுகளாக ஆர் எஸ் எஸ் ஐ பின் தொடர்வதாகவும், சரசங்கசாலக், மோகன் பகவத் போன்ற இந்த அமைப்பின் மூத்த தலைவர்களுடன் இணைப்பில் இருப்பதாக கூறினார். ஆர் எஸ் எஸ் தொண்டர்களின் ஒழுக்கம், தன்னலமற்ற சேவை மற்றும் தியாகம் போன்றவற்றால் ஈர்க்கப்பட்டு இந்த அமைப்பில் இணைந்ததாக தெரிவித்தார்.

மேலும் தனக்கு எந்தவித பதவியும் தேவையில்லை என்றும், முழு நேரமாக வேலையை செய்வது மட்டும்தான் குறிக்கோளாக உள்ளது என்று கூறி வகுப்புவாத குற்ற சாட்டுகளை தெரிவிப்பவர்களுக்கு சரியான பதிலடி அளித்தார். 

Tags:    

Similar News