முன்னாள் மாநிலத் தலைவர் நேரத்திற்கு வராததால் காங்கிரசை சரமாரியாக கலாய்த்த நிர்வாகிகள்!!

Update: 2025-10-06 15:59 GMT

கடந்த சில நாட்களுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கூடுதல் தொகுதிகளை கேட்பது மற்றும் அமைச்சரவையில் பங்கெடுத்துக் கொள்வது போன்றவை எங்களது உரிமை என்றும் இதுபோன்று பேசுவதால் நாங்கள் கூட்டணி மாறுவோம் என வலைதளங்களில் அவதூறு பரப்புகிறார்கள் எனக் கூறியிருந்தார்.

மேலும் தங்களுடைய நண்பர்களிடம் தங்களுக்கான கேட்பதாகவும், இதற்கு முன்பாக 110 தொகுதிகளில் தாங்கள் போட்டியிட்டு இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் வாக்கு திருட்டு நடப்பதாக கோரி தேர்தல் ஆணையத்தை கண்டிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சி சார்பில் சின்னசேலம் பகுதியில் கடந்த அக்டோபர் 4ஆம் தேதி கையெழுத்து இயக்கம் நடந்தது.

இந்த நிகழ்வுக்கு கே.எஸ்.அழகிரி மாலை 5 மணிக்கு வந்து விடுவதாக கூறப்பட்ட நிலையில் கூட்டம் கூடியிருந்தது. ஆனால் அவரோ 5 மணிக்கு வராமல் இரவு 7:00 மணிக்கு தான் அந்த இடத்திற்கே வந்துள்ளார். இதனால் மணிக்கணக்காக காத்திருந்த கூட்டம் கலைந்து இடமே காலியாகிவிட்டது.

இந்நிலையில் நிர்வாகிகள் சிலர் கூடுதல் தொகுதிகளை கேட்பது தவறில்லை. ஆனால் வருகின்ற கூட்டத்தை தக்க வைக்க தவறுகின்றாரே என கூறினர். மேலும் பசிக்குதுன்னு கேட்கின்றாரே தவிர பந்தியில் உட்காருவதற்கு தாமதமாக வருகிறார் என்று கேலியாக பேசினர். 

Tags:    

Similar News