ப.சிதம்பரத்துக்கு அடுத்த அடி! ரூ.10 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்டு தனியார் நிறுவனம் வழக்கு! நேரில் ஆஜராக மும்பை ஐகோர்ட் உத்தரவு!!

ப.சிதம்பரத்துக்கு அடுத்த அடி! ரூ.10 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்டு தனியார் நிறுவனம் வழக்கு! நேரில் ஆஜராக மும்பை ஐகோர்ட் உத்தரவு!!

Update: 2019-08-21 10:00 GMT


காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு எதிராக ரூ.10 ஆயிரம்கோடி இழப்பீடு கேட்டு, 63 மூன் டெக்னாலஜிஸ் நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.


மும்பை உயர் நீதிமன்றத்தில் 63 மூன்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் சார்பில் ப.சிதம்பரம், திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் செயலாளர் கே.பி.கிருஷ்ணன், பார்வோர்டு மார்கெட் கமிஷன் தலைவர் ரமேஷ் அபிஷேக் ஆகியோருக்கு எதிராக புகார் மனு அளிக்கப்பட்டது.


அந்த மனுவில் குறிப்பிட்டப்பட்டிருப்பதாவது:-





காங்கிரஸ் ஆட்சியி்ல் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தார். அப்போது, எங்கள் நிறுவனத்தை குறிவைத்து, ப.சிதம்பரம் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஏராளமான தொல்லைகளைக் கொடுத்தார். எங்கள் நிறுவனத்தின் மீது பல்வேறு அரசு அமைப்புகள் விசாரணையும், சோதனையும் நடத்தியதில் எந்தவிதமான பணமுறைகேடும், மோசடியும் நடக்கவில்லை என்பது தெரியவந்தது.


எங்கள் நிறுவனத்துக்கு எதிராக உள்நோக்கத்துடன் ப.சிதம்பரம், சதித்திட்டம் தீட்டி நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் எங்கள் நிறுவனத்துக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் நிறுவனத்துக்கு ஏற்பட்ட இழப்புக்கு ஈடாக 10 ஆயிரம் கோடி ரூபாயை ப.சிதம்பரம் வழங்க வேண்டும்.


இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


மும்பை உயர் நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, வரும் அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி ப.சிதம்பரம், இரு அதிகாரிகளான கே.பி. கிருஷ்ணன், ரமேஷ் அபிஷேக் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவி்ட்டார்.


Similar News