Sixth Sense Foundation மற்றும் Helo App இணைந்து தமிழகம் முழுவதிலும் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து அவற்றை மூடிவருகிறது!
Sixth Sense Foundation மற்றும் Helo App இணைந்து தமிழகம் முழுவதிலும் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து அவற்றை மூடிவருகிறது!
சாத்தியக் கூறுகள் உள்ள இடத்தில் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக Helo செயலியில் Sixth Sense Foundation சார்பில் பல தன்னார்வலர்கள் இணைக்கப்பட்டு, தமிழகம் முழுவதிலும் உள்ள ஆபத்தான ஆழ்துளை கிணறுகள் கண்டறியப்பட்டன. அந்த வகையில் இன்று (நவம்பர் 11) சேலம் மாவட்டம், கெங்கவள்ளி பகுதியில் இருந்த ஆழ்துளை கிணறு Sixth Sense அறக்கட்டளையின் முயற்சியினால், அரசு அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளது.
பிரதீப் குணசேகரன், Sixth Sense Foundation-ன் செயலாளர் கூறுகையில் "நமது சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகளை அரசு அதிகாரிகளின், தொண்டு நிறுவனங்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது ஒவ்வொரு குடிமகனுடைய கடமை. அரசே அணைத்து பிரச்சனைகளையும் கண்டுபிடிக்க வேண்டும் என்பதில்லை. Helo App மூலம் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் இருப்பதை பதிவு செய்தது ஆரோக்கியமான விஷயமே. இது போன்று பல பிரச்சனைகளுக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் தீர்வு காணலாம்" என்றார்
முதலில் Sixth Sense அறக்கட்டளையை சேர்ந்த தன்னார்வலர் மூலம் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறு குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டது. பிறகு ஆழ்துளை கிணறு அமைந்துள்ள நிலத்தின் உரிமையாளர், அப்பகுதியின் கிராம நிர்வாக அலுவலர், பஞ்சாயத்து தலைவர் ஆகியோரிடத்தில் அதனை மூட வேண்டி அனுமதி கேட்கப்பட்டது. அது எங்கள் கடமை நாங்களே செய்து முடிக்கிறோம் என்று மனமுவந்து அவர்கள் கூற, பாதுகாப்பான முறையில், சேலம் கெங்கவள்ளி ஆழதுளை கிணறு மூடப்பட்டது.
அதிகாரிகள், Sixth Sense Foundation தன்னார்வலர்கள் மற்றும் Helo App முயற்சியினால் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது.