அயோத்தி ராமர் கோவில் தீர்ப்பு வரவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ தீவிர சோதனை.!
அயோத்தி ராமர் கோவில் தீர்ப்பு வரவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் என்.ஐ.ஏ தீவிர சோதனை.!
ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் கிறிஸ்துவ தேவாலயத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியது. இதில் 250 க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இதனை தொடர்ந்து தமிழகம் மற்றும் கேரளாவில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் தமிழகத்தை சேர்ந்த வர்களுக்கு ISIS தீவிரவாத அமைப்புடன் தொடர்புள்ளது என கண்டறிந்தது. இது மட்டுமில்லாமல் தமிழகத்தில் இந்து இயக்க தலைவர்களை கொல்ல திட்டமிட்டதும் தெரிய வந்தது. அயோத்தி ராமர் கோவில் தீர்ப்பு வரவுள்ள நிலையில் ISIS தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ளவர்களை தேடி வருகிறது.
தமிழகத்தில் குறிப்பாக கோவை தூத்துக்குடி போன்ற நகரங்களில் சல்லடை போட்டு தேடியது என்.ஐ.ஏ இதில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த அசாருதீன் மற்றும் ஹிதாயதுல்லா இரண்டு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நேற்று உக்கடம் GM நகரில் சமீர் மற்றும் செளருதீன் இருவர் வீடுகளில் சோதனை மேற்கொண்ட என்.ஐ.ஏ பல்வேறு ஆவணங்கள் கணினி மெமரி கார்டுகள் கைப்பற்றபட்டன
இதனை தொடர்ந்து , தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்தனர். காயல்பட்டினம் . அபுல் ஹசன் சாதூலி என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர் சுமார் 6 மணிநேரம் சோதனை செய்யப்பட்டது அவரது வீட்டிலும் முக்கிய ஆவணங்கள் ஒரு கைபேசியை கைப்பற்றியுள்ளனர் என்.ஐ.ஏ.
நாகப்பட்டினம் மாவட்டத்திலும் சோதனை மேற்கொண்ட என்.ஐ.ஏ அங்கு சாதிக்அலி வீட்டில் அதிரடியாக நுழைந்தது சோதனை மேற்கொண்டது. நாகூரை அடுத்த சன்னமங்கலம் பகுதியில் முஹம்மது அஜ்மல் வீட்டில் நுழைந்த காவல்துறை சோதனை நடத்தியது அங்கு அவர் இல்லை அவர் உறவினர் வீட்டில் இருந்துள்ளார், அங்கு சென்று விசாரணைக்கு முஹம்மது அஜ்மலை அழைத்து சென்றுள்ளனர்
இதுமட்டுமில்லாமல் அயோத்தி ராமர் கோவில் வரும் 16 தேதி அல்லது 17 ஆம் தேதி தீர்ப்பு வரவுள்ள நிலையில் இந்த சோதனை தமிழகத்தில் பரபரப்பாகி உள்ளது.