நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சித்தவர்கள் இதற்க்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்..?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சித்தவர்கள் இதற்க்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்..?

Update: 2019-09-13 08:50 GMT

கடந்த 10-ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  “பிஎஸ் 6 மற்றும் ஆட்டோமொபைல் வாகனங்கள் வாங்குவதில் ஈடுபடுவதை விட ஓலா மற்றும் உபெர் அளிக்கும் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற மன நிலை புதிய தலைமுறையினருக்கு ஏற்பட்டுள்ளது என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இதனால் ஆட்டோமொபைல் மற்றும் உதிரிபாகங்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது” என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் உண்மையில் அனுபவபூர்வமான போக்கை குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் எப்படியாவது அரசை எதிர்க்க வேண்டும் என்கிற எதிர் போக்குடையவர்கள், புதிய தொழில் வல்லுநர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் நிர்மலா சீதாராமனின் அறிக்கை குறித்து கண்டன பார்வையில் பரபரப்பை ஏற்படுத்தின. ட்விட்டரில் எதிர் கருத்துக்களை பரப்புவது பரவாயில்லை, ஆனால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கூற்றை ஆதரிக்கவோ அல்லது ரத்து செய்யவோ அதற்கான ‘அனுபவ ரீதியான ஆதாரங்களை’ நாம் தேட வேண்டும்.



இது கடந்த 2015 ஆம் ஆண்டு மகிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மகிந்திர கூறிய கருத்து.



இது உபர் நிறுவனர் வால் ஸ்ட்ரீட் இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்து


இப்படி சுற்றி இருக்கும் நிதர்சன உண்மைகளின் அடிப்படையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து தெரிவித்திருந்தார். 'நீரில் மூழ்கி துடித்த மீனை, சாதுர்யமாக காப்பாற்றிய கொக்கு' என்று ஒரு தகவலை எப்படி திரிக்க முடியுமோ, அப்படி திரித்து செய்தி வெளியிடும் தமிழ் ஊடகங்கள், ஓலா, உபர் குறித்து பேசியவற்றை மட்டும் பரப்பி வருகின்றன. அதற்கு முன்னால், அமைச்சர் கூறிய கருத்துகளையும் திராணியோடு வெளியிட்டால் மட்டுமே உண்மை நிலை மக்களுக்கு தெரியும். அதுவரையில் கிணற்று தவளை நிலை தான், இது போன்ற ஊடங்களை சார்த்து இருப்பவர்களின் நிலை.


Similar News