சாஸ்திர பூஜை செய்வதற்காக விமர்சித்த காங்கிரஸை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்!!

சாஸ்திர பூஜை செய்வதற்காக விமர்சித்த காங்கிரஸை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்!!

Update: 2019-10-11 03:09 GMT

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் தசரா தினத்தன்று முதல் ரஃபேல் போர் விமானத்தை பெற்றுக்கொண்டார் , பின்னர் பாரம்பரிய சாஸ்திர பூஜை மேற்கொண்டார், சாஸ்திர பூஜை செய்ததற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பூஜையை ஒரு "தமாஷா" என்று வர்ணித்து, அதைத் தவிர்த்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.



இதுபோன்ற தமாஷா (சாஸ்திர பூஜை) செய்ய வேண்டிய அவசியமில்லை, முன்பு வாங்கிய போஃபோர்ஸ் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை நாங்கள் வாங்கியபோது, ​​யாரும் சென்று பூஜை செய்து அவற்றைக் கொண்டு வரவில்லை" என்று கார்கே கூறினார்.



நெட்டிஸின்கள் ஒரு பழைய வீடியோவைத் தோண்டி எடுத்தனர், இதில் காங்கிரஸ் தலைவரும், இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு இந்தியவில் தயாரிக்கப்பட்ட கப்பலான ஜல் உஷாவில் பூஜை செய்வதை காட்டுகிறது.



மற்றும் ஒரு வீடியோவை, இது முன்னாள் பாதுகாப்பு மந்திரி ஏ கே ஆண்டனியின் மனைவி எலிசபெத் ஆண்டனியை அதன் வெளியீட்டு விழாவின் போது ஐஎன்எஸ் விக்ராந்தின் மீது சிலுவை வரைவதைக் காட்டுகிறது.


Similar News