இனி எந்த சக்தியாலும் ராமர் கோவில் கட்டுவதை தடுத்து நிறுத்த முடியாது-ராஜ்நாத் சிங்

இனி எந்த சக்தியாலும் ராமர் கோவில் கட்டுவதை தடுத்து நிறுத்த முடியாது-ராஜ்நாத் சிங்

Update: 2019-11-25 05:23 GMT

ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நவம்பர் 30 , டிச., 6,12,16 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 5 கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் முடிவுகள் டிச.,23 அன்று அறிவிக்கப்பட உள்ளது. இங்கு, தற்போது பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொள்ள தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது. நரேந்திர மோடி ஜார்க்கண்டில் 5 முதல் 8 பொதுக்கூட்டங்களில் வரை தேர்தல் பிரச்சாரம் செய்வார் என கட்சி வட்டாரங்கள் கூறப்படுகிறது. நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில்  பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.



அப்போது ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து  ரத்து செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி நாட்டில் இரண்டு சட்டங்கள், இரண்டு கோடிகள் இருக்கக்கூடாது என்கிற சியாம பிரசாத் கனவை நிறைவேற்றி விட்டதாக கூறினார் மேலும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்பதை பா.ஜ.க. ஆரம்பத்திலிருந்தே தெரிவித்து வந்ததாகவும் அதற்கு உச்ச நீதிமன்றம் தற்போது அனுமதி வழங்கி விட்டதாகவும் தெரிவித்தார்.இனி எந்த சக்தியாலும் ராமர் கோவில் கட்டுவதை தடுத்து நிறுத்த முடியாது என்று பேசினார்.


Similar News