இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் அரசு வேலை கிடையாது - பெண்களுக்கு அதிகாரமளித்தல் கொள்கையின் கீழ் பா.ஜ.க அரசின் அதிரடி நடவடிக்கை!

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் அரசு வேலை கிடையாது - பெண்களுக்கு அதிகாரமளித்தல் கொள்கையின் கீழ் பா.ஜ.க அரசின் அதிரடி நடவடிக்கை!

Update: 2019-10-22 11:03 GMT

2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு வேலை கிடையாது என்ற அதிரடி அறிவிப்பை அசாம் மாநில அரசு வெளியிட்டுள்ளது.


அசாம் மாநிலத்தில் பா.ஜ.க கட்சியை சேர்ந்த சர்பானந்தா சோனோவால் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இன்று அம்மாநில அமைச்சரவையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டவர்களுக்கு அரசு வேலை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் இம்முறை அமலுக்கு வருகிறது. 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், அசாம் சட்டப்பேரவையில் Population and Women Empowerment Policy of Assam நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் இது செயல்படுத்தப்படுகிறது. தற்போது அரசு பணியில் உள்ள ஊழியர்களும் இவ்விதிமுறையை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் New Land Policyயும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி நிலமற்ற பூர்வகுடி மக்களுக்கு விவசாய நிலங்கள் மற்றும் வீடு கட்டுவதற்கான நிலங்களை வழங்க அந்தத் திட்டம் வழிவகுக்கிறது. அவர்கள் 15 ஆண்டுகளுக்கு நிலத்தை விற்க முடியாது. அடுத்து பேருந்து கட்டணம் 25 சதவிகிதம் உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.


Similar News