இந்தியாவுடன் இரண்டற கலந்த காஷ்மீரில் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” இல்லை, கல்லெறி இல்லை!
இந்தியாவுடன் இரண்டற கலந்த காஷ்மீரில் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” இல்லை, கல்லெறி இல்லை!
டாக்டர் அம்பேத்கரின் கடும் எதிர்ப்பையும் மீறி, 1954 - இல், அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவு, காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்கினார். இதற்காக அரசியல் அமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவு உருவாக்கப்ட்டது. பின்னர் அதனுடன் 35A பிரிவு இணைக்கப்பட்டது.
மற்ற மாநிலங்களுக்கு இல்லாத சிறப்பு அதிகாரங்களை காஷ்மீருக்கு வழங்கிதன் மூலம் முன்னாள் பிரதமர் நேரு, தீராத பிரச்சினைக்கும், மிகப்பெரிய முஸ்லிம் பயங்கரவாதத்திற்கும் அடித்தளம் அமைத்து இருந்தார்.
இப்போது அந்த தனி அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த முடிவை, துணிச்சல் மிக்க நரேந்திர மோடி அரசு எடுத்துள்ளது.
இதற்கான அறிவிப்பை, மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 மற்றும் 35A சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்படுவதாக அவர் அறிவித்தார்.
ஜனாதிபதி கையெழுத்துடன் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கும் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது
காஷ்மீர் தொடர்பான மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமித்ஷா.
1) காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370-வது சட்டப்பிரிவு நீக்கம்
2) சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீர் மாற்றப்படும்
3) லடாக் பிராந்தியம் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்றப்படும்
காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்படுவது தொடர்பான மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.