கார் மட்டும் அல்ல: சொந்தமாக வாங்கி அனுபவிக்கும் மோகம் பல பொருள்களின் மேல் குறைந்து வருகிறது!! பொருளாதார நிபுணர்கள் அலசல்!!
கார் மட்டும் அல்ல: சொந்தமாக வாங்கி அனுபவிக்கும் மோகம் பல பொருள்களின் மேல் குறைந்து வருகிறது!! பொருளாதார நிபுணர்கள் அலசல்!!
கார்கள், இதர மோட்டார் வாகனங்கள், வீடுகள், விலை உயர்ந்த செல்போன்கள், கணினிகள் உட்பட எந்த விலை மதிப்புள்ள பொருளையும் முழு பணம் கொடுத்து வாங்கி வைத்து அனுபவிக்கும் பழக்கம் இனி மெல்ல..மெல்ல குறைந்து விடும் என்றும் பொது சாதன பயன்பாடு அதிகரிக்கும் என்றும் அதே சமயம் ஒரு பொருளின் உற்பத்தி இதனால் குறைந்து விடாது என்றும், விற்பனை போக்கு மாறுபட்ட வடிவத்தை நோக்கி தற்போது செல்லத் தொடங்கியுள்ளது என்றும் வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் அனைத்து வணிகங்களும் தங்கள் வணிக நடைமுறை மாதிரிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
சமீபத்தில் மாருதி சுசுகி தலைவர் ஆர் சி பார்கவா பத்திரிக்கைக்கு அள்ளித்த பேட்டி ஒன்றில் “ ஓலா, உபேர் போன்ற பொது வாகனங்கள் மீது மக்கள் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர் என்கிற நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கருத்தை ஆதரித்து பேசினார்.
அது மட்டுமல்லாமல் ஆண்டு தனி நபர் வருமானம் இந்தியாவில் 2,200 டாலர் மட்டுமே ..ஆனால் ஐரோப்பிய நாடுகளில் ஆண்டுக்கு தனி நபர் வருமானம் 40,000 டாலர்களாக உள்ளன. இந்த நிலையில் ஆண்டுக்கு 10-15 சதவீதம் கார் விற்பனை எப்படி உயரும் .. நாம் அவ்வாறு எதிர்பார்க்கலாமா, இது பயனற்ற எதிர்பார்ப்பு எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் கார் விலை மற்றும் தரங்களில் இந்திய கார்கள் ஐரோப்பிய கார்களை விட மிகவும் குறைந்தவை என கூற முடியாது .. இரண்டு கார்கள் இடையே வித்தியாசங்கள் இல்லாத நிலையில் வருமானம் குறைந்த நம்முடைய வாடிக்கையாளர்கள் மட்டும் காருக்கு எப்படி பணம் செலுத்துவார்கள் .. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் 10-15 சதவீதமாக விற்பனை வளரும் என கார் உற்பத்தியாளர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்கள் ? ”
பார்கவாவின் கருத்துக்கள் இங்கு 3 வித அம்சங்களையும், மதிப்புகளையும் தெளிவு படுத்துகின்றன.
முதலாவதாக, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார் ஐரோப்பாவில் விற்பனையாகும் கார்களின் தரம், விலைக்கு கிட்டத்தட்ட ஒத்ததாக இருந்தால் இந்திய ஏற்றுமதியாளர்கள் ஏன் ஏற்றுமதியில் கவனம் செலுத்தக் கூடாது ... ஏற்றுமதி சந்தையை உருவாக்க அவர்கள் தற்போது சம்பாதிக்கும் லாபத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், தொழில்களை பாதுகாத்துக் கொள்வதில் அரசாங்கத்தை மட்டுமே எதிர்பார்த்துக் கொண்டு பிச்சை பாத்திரங்களுடன் நிற்கக்கூடாது.