ஓலாவின் 'வாடகை மோட்டார் சைக்கிள் சேவை' திட்டம் !! 150 நகரங்களில் களம் இறங்குகிறது
ஓலாவின் 'வாடகை மோட்டார் சைக்கிள் சேவை' திட்டம் !! 150 நகரங்களில் களம் இறங்குகிறது
இந்தியாவில் தொடர்ந்து தனது வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ள ola bike சேவையை விரிவாக்கம் செய்துள்ளது.ola நிறுவனம். தற்போது தனது வாடகை bike சேவையை இந்தியாவின் 150நகரங்களில் விரைவில் தொடங்கப்படும் என அறிவித்துள்ளது
அடுத்த 12மாதங்களில் மூன்று மடங்கு அதிக வளர்ச்சியை பெற வேண்டும் என்பதை ola தனது குறிக்கோளாகவும் அறிவித்து செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் பைக்கின் சேவை மிகவும் அத்தியவசியமாகக் கருதப்படுகிறது. இதனால் நிச்சயம் வாடகை bike அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெறும் என ஓலா நிறுவனம் கருதுகிறது.
ola நிறுவனம் அறிமுகப்படுத்தும் இந்த புதிய சேவை பயணிகளுக்கு மட்டுமல்லாது பல லட்சம் வேலையில்லா இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல வேலைவாய்ப்பாகவும் இருக்கும் எனவும் இதற்காக 3 லட்சம் பேருடன் களம் இறங்க உள்ளதாக ola நிறுவனம் தெரிவித்துள்ளது.