“ஒரே நாடு, ஒரே பாடத்திட்டம்” - தனியார் பள்ளி கூட்டமைப்பு கோரிக்கை!!

“ஒரே நாடு, ஒரே பாடத்திட்டம்” - தனியார் பள்ளி கூட்டமைப்பு கோரிக்கை!!

Update: 2019-09-17 05:55 GMT

''ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தைப்1 போன்று, ஒரே நாடு, ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வர வேண்டும்,'' என்று தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.


தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு, மெட்ராஸ் ஒய்.எம்.சி.ஏ. மற்றும் ஸ்கூல் வாய்ஸ் ஆகியன சார்பில் ஆசிரியர் தின விழா, சென்னை வேப்பேரியில் நடந்தது.


இதில், 120 பள்ளிகளைச் சேர்ந்த, 1,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில தலைவர், மார்ட்டின் கென்னடி பேசும்போது கூறியதாவது:-


தமிழக அரசு அறிவித்துள்ள, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வை, நாங்கள் வரவேற்கிறோம். தமிழக அரசின் பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தைவிட, மிக தரமாக உள்ளது. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் போன்று, தமிழக மாணவர்களை, அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் தயார் செய்யும் வகையில், ஒரே நாடு, ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வர வேண்டும்.


மருத்துவர்கள், வழக்கறிஞர்களை பாதுகாக்க சட்டம் உள்ளது போல, ஆசிரியர்களுக்கு சிறப்பு முன்னுரிமைகள் வழங்க வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.


Similar News