திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை! கிறிஸ்தவ மத வெறியை மூடி மறைக்க ஜெகன் மோகன் ரெட்டி நடவடிக்கை!!

திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை! கிறிஸ்தவ மத வெறியை மூடி மறைக்க ஜெகன் மோகன் ரெட்டி நடவடிக்கை!!

Update: 2019-08-28 12:54 GMT


திருமலையிலிருந்து திருப்பதிக்கு செல்ல திருமலையில் ராம்பகிஜா அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. அங்கு வழங்கப்படும் எலக்ட்ரானிக் டிக்கெட்டுகளின் பின்புறம் விளம்பரங்கள் அச்சடிக்கப்பட்டு வருகிறது. 


இந்நிலையில் திருமலையில் வழங்கப்பட்ட பேருந்து டிக்கெட்டுகளின் பின்புறம் கிறிஸ்தவ மத பிரச்சாரம் அச்சடிக்கப்பட்டு இருந்தது. அதாவது “ஜெருசலேம் புனித யாத்திரை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


திருமலையில் மாற்று மத பிரச்சாரம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் கிறிஸ்தவ மத சின்னங்களை நேரடியாகவோ மறை முகமாகவோ பயன்படுத்துவது முற்றிலும் தவறு. 


இந்த நிலையில், திருமலை போக்குவரத்துக் கழக பேருந்து டிக்கெட்டுகளில் கிறிஸ்தவ மத பிரச்சாரம் நடைபெறுவதை கண்டு இந்துக்கள் கொந்தளித்தனர். 


இது குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள சுனில் தியோத்தார், “திருமலை பேருந்து பணச்சீட்டில், கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம் யாத்திரை என்று கிறிஸ்தவ மத பிரச்சாரத்தில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளது. இது தேவையில்லாதது, ஏற்றுக்கொள்ள முடியாதது, மதவெறியை தூண்டுவது. அனைத்துக்கும் மேலாக ஏழுமலையானை அவமதிப்பது” என்று குறிப்பிட்டுள்ளார்.




https://twitter.com/sunil_deodhar/status/1164832681609195521?s=21



ஆந்திராவில் தேர்தல் நேரத்தில் ஜெகன் மோகன் ரெட்டி, தான் மீண்டும் இந்து மதத்திற்கு மதம் மாறிவிட்டதைப்போன்று செய்திகளை பரப்பி அப்பாவி இந்துக்களை நம்ப வைத்தார்.


ஆட்சியை பிடித்ததும் தனது தந்தை முன்னாள் ஆந்திர முதல்வர் ஓய்.எஸ்.ராஜசேகர ரெட்டியைப் போன்றே கிறிஸ்தவ மத வெறியை காட்டி வருகிறார். 


ராஜசேகர ரெட்டி, ஆந்திராவில் கிறிஸ்தவ மத மாற்றத்தை சிவப்பு கம்பளம் விரித்து திறந்து விட்டடார். இதனைத் தொடர்ந்து ஆந்திராவில் இந்துக்களை மதம் மாற்றுவது அதுவரை இல்லாத அளவிற்கு நடந்தது.


மதவெறியின் உச்சக்கட்டமாக, திருப்பதி ஏழுமலையானிடம் தன் வேலையை காட்டினார். அதோடு அதே மலை பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி தன் முடிவை தேடிக்கொண்டார்.


தந்தையை தொடர்ந்து அரசியல் களம் கண்ட ஜெகன் மோகன் ரெட்டி, முதலில் தன் கிறிஸ்தவ மத வெறியை வெளிக்காட்டி வந்தார். அதனால் படு தோல்வியை கண்டார். 


இந்த நிலையில்தான், கடந்த தேர்தலில் தான், மீண்டும் இந்து மதத்திற்கு மாறிவிட்டது போன்று செய்திகளை வெளியிட்டார். இந்து கோயில்களுக்கு செல்வது போன்ற படங்கள், நெற்றியல் குங்குமம் இட்டதுபோன்ற படங்கள், கையில் சாமி கயிறு கட்டியது போன்ற படங்களை தேர்தல் நேரத்தில் தொடர்ந்து வெளிவருமாறு பார்த்துக்கொண்டார்.


இதன் மூலம் ஆந்திராவில் உள்ள இந்துக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றார். மிகப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தார்.


முதல்வர் நாற்காலியில் அமர்ந்தவுடன், முதல் வேலையாக குடும்பத்துடன், ஜெருசலேம் புனிதப் பயணம் சென்றார். அப்போதுதான் இந்துக்களுக்க உண்மை புரிந்தது. ஜெகன் மோகன் ரெட்டி உண்மையில் இந்துவாக தாய் மதம் திரும்பவில்லை. ஏமாற்றுவதற்காகவே நாடகம் நடத்தியுள்ளார் என்பது புரிந்தது.


பின்னர் திருமலையில் ஏழுமலையானிடம் கைவைக்கும் விதமாக, திருமலை பேருந்தில் பயணச்சீட்டு மூலம் கிறிஸ்தவ மத பிரச்சாரத்தை தொடங்கினார். இது இந்துக்களைக் கொந்தளிக்கச் செய்தது.


இந்த செயல்கள் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஓட்டு போட்ட  ஒட்டுமொத்த இந்துக்களையும் கடும் கோபம் அடையச் செய்துள்ளது.


இந்துக்களின் எதிர்ப்பை சம்பாதித்த கிறிஸ்தவ மத வெறியர் ஜெகன் மோகன் ரெட்டி, இந்துக்களிடம் மீண்டும் நல்ல பிள்ளை பெயர் எடுப்பதற்காக, திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்கள் அல்லாத மாற்று மதத்தவருக்கு பணி இல்லை என்று அறிவித்துள்ளார்.


இதுதொடர்பாக, ஆந்திர மாநில முதன்மை செயலாளர் எல்.வி. சுப்ரமணியன், செய்தியாளர்களிடம் பேசும்போது, “இந்து மதத்தில் இருந்து தற்போது மதம் மாறியவர்கள் அல்லது பணியில் இருப்பவர்கள் மதம் மாறினால் திருப்பதி தேவஸ்தானம், இந்து அறநிலைய துறை பணிகளில் நீடிக்க முடியாது. இந்து மத சம்பிரதாயங்களை தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்களா என்பதை கண்காணிப்பதற்காக ஒரு குழு அமைக்க உள்ளது. இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள், அந்த பணியில் இருப்பதை ஏற்று கொள்ள முடியாது” என்று சுப்ரமணியன் கூறினார்.


இதன் மூலம் இதுவரை இந்து நம்பிக்கை இல்லாத கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் இந்துக்களின் புனித இடமான திருப்பதியில் வேலை பார்த்துள்ளனர் என்பது தெளிவாகிறது என்கின்றனர் இந்து ஆன்மிக பெரியவர்கள்.


Similar News